தமிழகம்

போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல்: ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகர் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை

செய்திப்பிரிவு

பூந்தமல்லி: திரு​வேற்​காடு அருகே வானகரம் பகுதி​யில் உள்ள தனியார் அடுக்​குமாடிக் குடி​யிருப்​பில் வசித்து வருபவர் பாலாஜி முருகதாஸ். தனியார் தொலைக்​காட்​சி​யின் பிக்​பாஸ் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற இவர், ‘பயர்’ என்ற திரைப்​படத்​தில் நடித்​துள்​ளார்.

இந்​நிலை​யில் பாலாஜி முருகதாஸ் போதைப் பொருள் பயன்​படுத்​து​வ​தாகவும், அவர்தன் வீட்​டில் போதைப் பொருளை பதுக்கி வைத்​திருப்​ப​தாகவும் நேற்று முன்​தினம் திரு​வேற்​காடு போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

அதன் அடிப்​படை​யில் திரு​வேற்​காடு இன்ஸ்​பெக்​டர் மற்​றும் போலீ​ஸார் பாலாஜி முருகதாஸ் வீட்​டுக்கு சோதனைக்​காக சென்​றனர். இத​னால் அதிர்ச்​சி​யடைந்த பாலாஜி முருகதாஸ், தனது செல்​போனில் வீடியோ எடுத்​துள்​ளார்.

போலீ​ஸாரின் அறி​வுறுத்​தலை​யும் பொருட்​படுத்​தாமல் அவர் வீடியோ எடுத்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. “உங்​கள் வீட்​டில் போதைப் பொருளை பதுக்கி வைத்​திருப்​ப​தாக வந்த ரகசி​யத் தகவலை​யடுத்து, சோதனை செய்ய வந்​துள்​ளோம்” என்று போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

அப்​போது, பாலாஜி முருகதாஸ், “சோதனை செய்​வதற்​கான எவ்​வித முறை​யான ஆவணங்​களும் இல்​லாமல் என் வீட்​டில் சோதனை செய்​வது கண்​டிக்​கத்​தக்​கது.

நான் போதைப் பொருள் பயன்​படுத்து​கிறேனா என்​பதை எனக்கு ரத்​தப் பரிசோதனை செய்து அறிந்​து​கொள்​ளுங்​கள்” என்று கூறி போலீ​ஸாரிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

போலீ​ஸார் தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் பாலாஜி முருகதாஸ் வீட்​டில் சோதனை மேற்​கொண்​டனர். அதில், எந்த போதைப் பொருளும் கிடைக்​க​வில்லை. இது​குறித்த தகவல்​களை பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்டு, போலீ​ஸாருக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இச்​சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்ள நிலை​யில், பாலாஜி முருகதாஸ் வசிக்​கும் அடுக்​குமாடிக் குடி​யிருப்​பில் வசிக்​கும் பெண் ஒரு​வர் அளித்த புகாரின் பேரில் இச்​சோதனை நடந்​த​தாக போலீ​ஸார் தரப்​பில் கூறப்​படு​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT