சேலம்: பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறும் பாமக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில், யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் அறிவிப்பார். அவரது தலைமையில்தான் பாமக செயல்பட்டு வருகிறது.
அன்புமணி மீதான முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. தலைவர் பதவி குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தவறான கடிதம் கொடுத்தது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுதான் கூறினோம். தேர்தலில் போட்டியிட அன்புமணி விருப்பமனு வாங்குவது தவறு. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது குறித்து ராமதாஸ் முடிவு செய்வார். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார். சேலம் எம்எல்ஏ அருள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.