தமிழகம்

அன்புமணி பிரச்சாரம்: பயணத் திட்டம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாமக அங்​கம் வகித்து வரும் நிலை​யில், கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி, கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து இன்று முதல் இரண்டு நாட்​களுக்கு தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட​வுள்​ளார். அதன்​படி இன்று (ஏப்​.10) தனது பரப்​புரையை, கள்​ளக்​குறிச்சி மாவட்​டம், ரிஷிவந்​தி​யம் தொகு​திக்​குட்​பட்ட மணலூர்​பேட்​டை​யில் தொடங்​கும் அவர், அதைத் தொடர்ந்து பகண்டை கூட்​டு​சாலை பகு​தி​யில் நடை​பெறும் பொதுக்​கூட்​டத்​தில் உரை​யாற்​றுகி​றார்.

பின்​னர் திருக்​கோ​விலூர் மற்​றும் விழுப்​புரம் நகரப் பகு​தி​களில் கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக வாக்​குச் சேகரிக்​கும் அவர், இறு​தி​யாக பிரச்​சா​ரத்தை விக்​கிர​வாண்​டி​யில் நிறைவு செய்​கி​றார். இதையடுத்து நாளை (ஏப்​.11) செஞ்சி தொகு​தி​யில் தனது பயணத்​தைத் தொடர்​கி​றார். அங்​குள்ள மேல்​மலை​ய​னூர் மற்​றும் செஞ்சி ஆகிய முக்​கிய இடங்​களில் பரப்​புரை மேற்​கொண்ட பிறகு, மயிலம் தொகு​திக்கு உட்​பட்ட நாட்​டார்​மங்​கலம் பகு​தி​யில் மக்​களைச் சந்​தித்​துப் பேசுகி​றார்.

          

இறு​தி​யாக, விக்​கிர​வாண்டி தொகு​திக்கு உட்​பட்ட அன்​னியூர் பகு​தி​யில் நடை​பெறும் பிரம்​மாண்ட தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் உரை​யாற்றி தனது இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்​கி​றார். அன்​புமணி​யின் வரு​கையை முன்​னிட்டு விழுப்​புரம் மற்​றும் கள்​ளக்​குறிச்சி மாவட்​டங்​களில் பாமக மற்​றும் கூட்​டணி கட்​சி​களின் சார்​பில் உற்​சாக​மான வரவேற்​புக்கு ஏற்​பாடு​கள் செய்யப்பட்டு வருகின்​றன.

SCROLL FOR NEXT