அன்புமணியுடன் வடிவேல் இராவணன் |கோப்புப் படம்

 
தமிழகம்

பாமகவில் முதற்கட்டமாக 3 வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழினி

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலில் மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, கீழ்வேளூரில் வடிவேல் இராவணன் போட்டியிருக்கிறார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது முதற்கட்டமாக மூன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.

          

அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வருமாறு:

1. கீழ்வேளூர் - ச.வடிவேல் இராவணன், பொதுச் செயலாளர்.

2. அம்பத்தூர் - கே.என்.சேகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர், மாநிலத் துணைத் தலைவர்.

3. செஞ்சி - அ.கணேஷ் குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், இளைஞரணித் தலைவர்.

SCROLL FOR NEXT