உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி: பிரதமர் மோடி விரைவில் புதுச்சேரி வரவிருப்பதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
அண்மையில் புதுச்சேரி வந்த குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், புதுவையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி துணைநிலை ஆளுநர் பேசியுள்ளார். அதைப்பற்றி ஆளுநர் என்னிடம் கூறினார். புதுவைக்கு விரைவில் மகத்தான திட்டங்கள் வர உள்ளன. பிரதமர் புதுவைக்கு வரும்போது அந்தத் திட்டங்களுக்கு செயல்வடிவம் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி விரைவில் புதுவை வர இருக்கிறார். அப்போது, புதுச்சேரி வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை அறிவிக்கிறார். புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மக்களின் ஆதரவோடு அமையும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.