சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். உடன் மாநில அமைச்சர் என்.ஆனந்த், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

“தமிழகத்துக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து கிடைக்கும்” - பிரதமர் மோடி உறுதி

ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: தமி​ழ​கத்​தில் ரூ.13,000 கோடி​யில் பல்​வேறு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி, நிறைவடைந்த திட்​டங்​களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘பு​திய சிகரங்​களைத் தொடும் தமி​ழ​கத்தை உரு​வாக்க மத்​திய அரசின் அனைத்து உதவி​களும் கிடைக்​கும்’’ என்று உறுதி அளித்​தார்.

மத்​திய அரசு சார்​பில் தமி​ழ​கத்​தில் ரூ.13,000 கோடி​யில் பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​தல், நிறைவடைந்த திட்​டங்​களைத் தொடங்​கும் நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​று, ரூ.4,900 கோடி​யில் கட்​டப்​பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்​டத்​தின் 2-ம் கட்​ட​மான பூந்​தமல்லி - வடபழனி வழித்​தடத்​தைத் திறந்து வைத்​தார். ரூ.3,700 கோடி​யில் 4 வழி திரு​வாரூர் புறவழிச் சாலை உள்​ளிட்ட முக்​கிய தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி, நிறைவடைந்த பல்​வேறு திட்​டங்​களைத் தொடங்கி வைத்​தார்.

என்​எச்​-744-ல் 36 கி.மீ. நீள​முள்ள, 4 வழிச்​சாலை​யான வடு​கப்​பட்டி - தெற்கு வெங்​கநல்​லூர் சாலை, என்​எச்​-744ஏ-ல் 30 கி.மீ. நீள​முள்ள, 4 வழிச்​சாலை​யான மதுரை சுற்​றுச் சாலை ஆகிய​வற்றை திறந்து வைத்​தார். என்​.எச்​.83-ல் நாகப்​பட்​டினம் - தஞ்​சாவூர் பிரி​வில் 4 வழி திரு​வாரூர் புறவழிச் சாலைக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

ரூ.750 கோடி​யில் ரயில்வே உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களான காரைக்​கால் - பேரளம் ரயில் பாதை, கோவை, அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கட்​டப்​பட்​டுள்ள 3 ரயில்வே மேம்​பாலங்​களைப் பிரதமர் மோடி திறந்து வைத்​தார். அம்​ரித் பாரத் ரயில் நிலை​யத் திட்​டத்​தின் கீழ் சீரமைக்​கப்​பட்ட பழனி, வேலூர் கன்​டோன்​மென்ட், அம்​பாச​முத்​திரம், பரமக்​குடி, நாமக்​கல் ஆகிய 5 ரயில் நிலை​யங்​களை​யும் திறந்து வைத்​தார்.

தமி​ழ​கத்​தில் துறை​முகம் சார்ந்த பல்​வேறு திட்​டங்​கள் மற்​றும் சென்னை துறை​முகத்​தில் 4 உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களை​யும் தொடங்கி வைத்​தார்.

சென்னை பெட்​ரோலி​யம் கார்ப்​பரேஷன் லிமிடெட் நிறு​வனத்​தின் மணலி சுத்​தி​கரிப்பு நிலை​யத்​தில் குரூப் 2, 3 லூப் ஆயில் பேஸ் ஸ்டாக்ஸ் திட்​டத்​துக்கு அடிக்​கல் நாட்​டி​னார். சென்னை ஐஐடி​யில் உள்ள சுதா கோபால​கிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்​தைத் திறந்து வைத்​தார்.

பின்​னர் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இன்று நமது நாட்​டுக்​கும், தமி​ழ​கத்​துக்​கும் சரித்​திர முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நாள். இன்று ரூ.13,000 கோடி​யில் பல்​வேறு திட்​டங்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. நிறை​வேற்​றப்​பட்ட திட்​டங்​கள் மக்​கள் பயன்​பாட்​டுக்கு திறக்​கப்​பட்​டுள்​ளன. இன்று முதல் நவராத்​திரி புனித காலம் தொடங்​கு​கிறது. புண்​ணிய பூமி​யாம் தமி​ழ​கத்​தில் இருந்து நாட்டு மக்​கள் அனை​வ​ருக்​கும் நவராத்​திரி நல்​வாழ்த்​துக்​கள் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நான் கடந்த 2001-ம் ஆண்டு அக்​.1-ம் தேதி முதல்​வ​ராகப் பொறுப்​பேற்று கொண்​டேன். அப்​போ​தில் இருந்து முதல்​வ​ராக​, பிரதம​ராக 25 ஆண்​டு​களை நிறைவு செய்​திருக்​கிறேன். நான் முதல்​வ​ராக இருந்​தவன் என்ற முறை​யில் மாநிலங்​களின் எதிர்​பார்ப்​பு​களை நன்கு புரிந்து கொண்​டேன். ஆகை​யால் தான் பிரதம​ரான உடனேயே அந்த எதிர்​பார்ப்​பு​களை நிறை​வேற்ற முழு முயற்​சிகளை மேற்​கொண்​டேன்.

நான் முதல்​வ​ராக இருந்த போது முன்​னாள் முதல்​வர்​கள் மு.கருணாநி​தி, ஜெயலலிதா ஆகி​யோ​ருடன் உரை​யாடும் வாய்ப்பு கிடைத்​தது. பிரதம​ரான பிறகு ஜெயலலி​தா, ஓ.பன்​னீர்​செல்​வம், பழனி​சாமி, மு.க.ஸ்​டா​லின் போன்ற தலை​வர்​களு​டன் இணைந்து பணி​யாற்​றும் வாய்ப்பு எனக்கு கிடைத்​தது.

அரசுகள் மாறிக் கொண்​டிருந்​தன. ஆனால், தமி​ழ​கத்​தின் வளர்ச்​சி​யும் இங்​கிருக்​கும் மக்​களுக்​குச் சேவை புரி​யும் எனது மன உறு​தி​யும் எப்​போதும் தொடர்ந்​தது. இதே உறு​திப்​பாட்​டுடன் முதல்​வர் விஜய் உடன் இணைந்து தமி​ழ​கத்​தின் வளர்ச்சி பயணத்தை முன்​னெடுத்​துச் சென்று கொண்​டிருக்​கிறேன்.

இன்று தமி​ழ​கத்​தில் ஏராள​மான சாலை மற்​றும் ரயில் திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளன. இது தமி​ழ​கத்​தின் வளர்ச்​சிக்கு மிக​வும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக இருக்​கும்.

தூத்​துக்​குடி​யில் உள்ள வ.உ.சி. துறை​முகம் ரூ.17,000 கோடி​யில் உலகத்​தரம் வாய்ந்​த​தாக மெகா கன்​டெய்​னர் மற்​றும் பசுமை எரிசக்தி மைய​மாக மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சென்னை காசிமேடு மீன்​பிடி துறை​முகம் நவீனப்​படுத்​து​வ​தாக இருக்​கட்​டும், கடல்​பாசி பூங்கா மேம்​பாடு திட்​டம் ஆகட்​டும் இதில் மத்​திய அரசு பல்​வேறு உதவி​கள் புரிந்து வரு​கிறது.

விவ​சா​யிகள் கடன் பற்று அட்டை இப்​போது மீன​வர்​களுக்​கும் விரி​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மீனவ குடும்​பங்​கள் மற்​றும் அத்​தொழில் சார்ந்​தவர்​களின் வாழ்க்கை மேம்​பட்டு வரு​கிறது. புதிய சிகரங்​களைத் தொடும் தமி​ழ​கத்தை உரு​வாக்க மத்​திய அரசிடம் இருந்து தேவை​யான உதவி​கள் அனைத்​தும் கிடைக்​கும்.

தமிழக மக்​களின் உழைப்பு தேசத்​தின் எதிர்​காலத்​துக்கு வலு சேர்க்க பெரும் பங்​காற்ற வேண்​டும். வளர்ச்சி அடைந்த தமி​ழ​கத்​தில் இருந்து வளர்ச்சி அடைந்த பாரதத்​தைப் படைக்​கும் உறு​திப்​பாட்டை மெய்​யாக்​கு​வோம். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

இவ்​விழா​வில் முதல்​வர் விஜய், ஆளுநர்அர்​லேகர், மத்​திய அமைச்​சர் மனோகர் லால், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், தமிழக அமைச்​சர் என்​.ஆனந்த், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT