கோப்புப் படம்

 
தமிழகம்

முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மோகன் கணபதி

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், "முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

          

பிரதமரின் வாழ்த்துக்கு முதல்வர் தனது சமூக ஊடக பதிவில் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ் வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT