போலீஸாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் பி.எம்.மன்னன். விசாரணைக்கு அழைக்கப்பட்ட தவெக எம்எல்ஏ முஸ்தபாவின் உதவியாளர் கனிராஜ். படங்கள்: நா.தங்கரெத்தினம்

 
தமிழகம்

தவெக எம்எல்ஏவிடம் ரூ.30 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு: அதிமுக மாநில நிர்வாகி பி.எம்.மன்னன் கைது

சொந்த ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: தவெக எம்​எல்ஏ முஸ்த​பாவிடம், ஆட்​சிக்கு எதிராக வாக்​களிக்க ரூ.30 கோடி குதிரை பேரம் நடத்​தி​ய​தாக அளிக்​கப்​பட்ட புகாரில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செய​லா​ள​ரும், மாநக​ராட்சி முன்​னாள் துணை மேயரு​மான பி.எம். மன்​னனை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் கைது செய்​தனர். நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட அவரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.

மதுரை மத்​திய தொகுதி தவெக எம்​எல்ஏ முஸ்தபா சில நாட்​களுக்கு முன்பு செய்​தி​யாளர்​களிடம் பேசி​யபோது, “தவெக வெற்றி பெற்று நல்​லாட்சி தரு​வதைக் கெடுக்க திமுகவும், அதிமுகவும் முயற்சி செய்​கின்​றன. திமுகவும் அதிமுகவும் மீண்​டும் குதிரை பேரத்​தில் ஈடு​படு​கின்​றன.

என்னை தொடர்​பு​கொண்ட அதிமுக பிர​முகர், ‘நீங்​கள் முதலில் ரூ.15 கோடி வாங்​கிக் கொள்​ளுங்​கள், தவெக அரசுக்கு எதிரான நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் வரும்​போது, அரசுக்கு எதிராக வாக்​களித்த பின்​னர் மேலும் ரூ.15 கோடி வாங்​கிக் கொள்​ளுங்​கள்’ என பேரம் பேசினர்” என பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டினார். இந்த பேரத்​தின் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் யார் என்​பது குறித்த தொலைபேசி உரையாடல் ஆடியோ ஆதா​ரம் தன்​னிடம் இருப்​ப​தாகவும், அவற்றை விரைவில் வெளி​யிடுவ​தாகவும் முஸ்தபா தெரி​வித்​திருந்​தார்.

எம்​எல்ஏ முஸ்த​பாவின் குற்​றச்​சாட்டு அடிப்​படை​யில் அவரது உதவியாளர் கனிராஜ் அளித்த புகாரின்​பேரில் மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் வழக்கு பதிவு செய்து, மதுரை மாநக​ராட்சி முன்​னாள் துணை மேயர் பி.எம்.மன்​னனை கைது செய்​தனர். முன்​னாள் மத்​திய அமைச்​சர் மு.க.அழகி​ரிக்கு நெருக்​க​மான இவர், சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு 2 மாதங்​களுக்கு முன்​புதான் அதிமுக​வில் சேர்ந்​தார். மதுரை விஸ்வநாத​புரம் மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீஸ் அலு​வல​கத்​தில் மன்​னனிடம் காவல் துணை ஆணை​யர் திவ்யா, உதவி ஆணை​யர்​கள் ஆரோக்​கியராஜ், செல்​வக்​குமார் ஆகியோர் விசா​ரணை நடத்​தினர்.

இதே வழக்கு தொடர்​பாக புகார் அளித்த எம்​எல்​ஏவின் உதவியாளர் கனிராஜிடமும் விசா​ரணை மேற்​கொண்​டனர். அவரிடம், மன்​னன் குதிரை பேரம் தொடர்​பாக பேசிய​தாக கூறப்​படும் ஆடியோ ஆதா​ரங்​களை கேட்டு விசா​ரித்​தனர். மன்​னன் மட்​டும் எம்​எல்ஏ முஸ்தபா தரப்​பினரிடம் பேரம் பேசினாரா? இதன் பின்​னணி​யில் இருந்​தவர்​கள் யார்? பணப் பரிவர்த்​தனைக்​கான ஏற்​பாடு செய்​யப்​பட்​டதா என்​பது குறித்​தும் நேற்று காலை 6 மணி முதல் 4 மணி நேரம் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

மன்​னனை விசா​ரணைக்கு அழைத்​ததை அறிந்த முன்​னாள் அமைச்​சர்​கள் செல்​லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அதிமுக அமைப்​புச் செய​லா​ளர் வி.வி. ராஜன் செல்​லப்பா தலை​மையில் அதிமுக​வினர் மத்​திய குற்​றப்​பி​ரிவு அலு​வல​கத்​தில் திரண்​டனர். அவர்​கள் மன்​னனை சந்​தித்து பேசினர்.

சிறை​யில் அடைக்க மறுப்பு: விசா​ரணைக்​குப் பிறகு மன்​னனை மருத்​துவ பரிசோதனைக்​காக மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு போலீ​ஸார் அழைத்​துச் சென்​றனர். பின்​னர் அவரை நேற்று இரவு மதுரை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். மன்​னன் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் ஆஜராகி “இவ்​வழக்​கில் இன்று (நாளை) விசா​ரணைக்கு ஆஜராகும்​படி, 5-ம் தேதி சம்​மன் அனுப்​பியுள்​ளனர்.

ஆனால், ஒரு நாளுக்கு முன்​னதாகவே போலீ​ஸார் அவரை கைது செய்​துள்​ளனர். இது உயர், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களுக்கு எதிரானது. எனவே, அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்​டும்” என்​றனர். இதை ஏற்​றுக்​கொண்ட நீதிபதி ஜோசப் ஜாய், மன்​னனை சிறை​யில் அடைக்க மறுத்து அவருக்கு சொந்த ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT