தமிழகம்

அரசு செய்தி சேனல் தொடங்க கோரி வழக்கு

செய்திப்பிரிவு

மதுரை: இந்​தி​யா​வில் உள்ள அனைத்து மாவட்​டங்​களி​லும் மத்​திய அரசு சார்​பில் செய்தி சேனல்​கள் தொடங்க உத்​தர​விடக் கோரிய வழக்​கில் மத்​திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தேனி மாவட்​டம் மணி நகரத்​தைச் சேர்ந்த விஜய பாண்​டியன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​: இந்​தி​யா​வில் 766 மாவட்​டங்​களி​லும் மத்​திய அரசின் செய்தி சேனல்​கள் தொடங்க மத்​திய அரசு உரிய கொள்கை முடி​வெடுக்​க​வும், ஊடகங்​களின் விதி​மீறல்​ககளுக்​காக ஊடக சட்​டத்​தில் தேவையான திருத்​தம் மேற்​கொள்​ள​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இம்மனுவை நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்​.சக்திவேல் அமர்வு விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள் மனு தொடர்பாக மத்​திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.8-க்கு தள்ளிவைத்​தனர்.

SCROLL FOR NEXT