தமிழகம்

மெட்ரோ ரயில் பயணத்துக்கு மே 1 முதல் சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: மெட்ரோ ரயில் பயண அட்டை பயன்​பாட்​டிலிருந்து சிங்​கார சென்னை அட்​டைக்கு மே 1-ம் தேதி​முதல், முழு​மை​யாக மாற திட்​ட​மிடப்பட்டுள்​ளது. எனவே பழைய பயண அட்​டை​யில் மீத​முள்ள தொகை​யை, சிங்​கார சென்னை அட்​டைக்கு மாற்​றிக்​கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

சென்னை மெட்ரோ ரயி​லில் டிக்​கெட் எடுக்க, கவுன்ட்​டர்​களில் பயணி​கள் வரிசை​யில் நெடுநேரம் காத்​திருப்​ப​தைத் தவிர்க்க சி.எம்​.ஆர்​.எல். பயண அட்டை கடந்த 2015-ம் ஆண்டு அறி​முகம் செய்யப்​பட்​டது. 5 ஆண்​டு​கள் வரை செல்​லுபடி​யாகும் இந்த அட்​டையை பயன்​படுத்​தும்​போது, 20 சதவீதம் கட்​ட​ணத் தள்​ளு​படி கிடைக்கும்.

இதற்​கிடை​யில் தேசிய பொது போக்​கு​வரத்து அட்​டையை (சிங்​கார சென்னை அட்​டை) மெட்ரோ ரயில் நிறு​வனம் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​.14-ம் தேதி அறி​முகப்​படுத்​தி​யது. இந்த அட்​டையை ஊக்​கப்​படுத்த மெட்ரோ ரயில் நிறு​வனம் பல்​வேறு முயற்​சிகளை எடுத்து வந்​தது.

மேலும், சிங்​கார சென்னை அட்​டைக்கு முழு​மை​யாக மாற கடந்த ஆண்டு ஏப்​.1-ம் தேதி நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. 41 மெட்ரோ ரயில் நிலை​யங்​களி​லும் படிப்​படி​யாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பயண அட்​டைகளை ரீசார்ஜ் செய்​யும் வசதி நிறுத்​தப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து பயண அட்​டை​யில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்​களில் பயணிப்​ப​தற்​கும், மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் வாக​னம் நிறுத்​து​வதற்​கும் பயன்​படுத்தி வந்​தனர்.

இந்​நிலை​யில் மெட்ரோ ரயில் நிறுவன பயண அட்டை பயன்​பாட்​டிலிருந்து சிங்​கார சென்னை அட்​டைக்கு மே 1-ம் தேதி​முதல், முழு​மை​யாக மாற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: மெட்ரோ ரயில்​களில் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் பயண அட்​டை​யுடன் கூடு​தலாக ‘சிங்​கார சென்னை அட்டை (தேசிய பொது போக்​கு​வரத்து அட்​டை)’ அறி​முகப்​படுத்​தப்​பட்​டது.

மத்​திய அரசின் வழி​காட்​டு​தல்​களின்​படி, நாடு முழு​வதும் உள்ள பொதுப் போக்​கு​வரத்​துச் சேவை​களில் தடையற்ற பயணத்தை உறுதி செய்​யும் வகை​யில், மே 1-ம் தேதி​முதல், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் சிங்​கார சென்னை அட்​டைக்கு முழு​மை​யாக மாற திட்​ட​மிடப்பட்டுள்​ளது.

எனவே, மெட்ரோ ரயில்​களில் பயணம் செய்​ய​வும், வாகன நிறுத்​தங்​களை பயன்​படுத்​த​வும், பயணி​கள் தங்​களது பழைய பயண அட்​டை​யில் மீத​முள்ள தொகை​யை, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மொபைல் செயலி (Mobile App) மூலம் பெறப்​படும் QR Stored Value Pass (SVP) அல்​லது தேசிய பொது போக்​கு​வரத்து அட்​டைக்கு மாற்​றிக்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.

SCROLL FOR NEXT