தமிழகம்

சென்னை - ஹவுரா உட்பட 7 ரயில் வழித்தடங்களை 4 வழிப்பாதையாக விரிவுபடுத்த திட்டம்

கூடுதல் ரயில்கள் இயக்கலாம்; பயண நேரம் குறையும்

செய்திப்பிரிவு

சென்னை: ரயில்​களின் இயக்​கத் திறனை அதி​கரிக்​க​வும், பயண நேரத்​தைக் குறைக்​கவும் சென்னை - ஹவுரா (கொல்​கத்​தா) வழித்​தடம் உட்பட 7 வழித்​தடங்​களை (அதி அடர்த்தி வழித்​தடங்​களை) 4 வழிப்​பாதைகளாக விரிவுபடுத்த ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது.

நாட்​டின் ரயில்வே உள்​கட்​டமைப்பை மேம்​படுத்த பல்​வேறு திட்​டங்​களை ரயில்வே துறை செயல்​படுத்தி வரு​கிறது. தண்​ட​வாளங்​களை மேம்​படுத்​து​வது, ரயில் நிலை​யங்​களின் அடிப்​படை வசதி​களை ஏற்​படுத்​து​வது என பல்​வேறு நடவடிக்​கைகள் எடுக்​கப்​படு​கின்​றன.

இதன் ஒரு பகு​தி​யாக, நாட்டின் மிக பரபரப்​பான 11,000 கி.மீ. அதி-அடர்த்தி ரயில் வலைத்​தளத்தை (நெட்​வொர்க்​கை) 4 வழிப்​பாதைகளாக மாற்ற ரயில்வே துறை திட்​ட​மிட்​டுள்​ளது. இத்​திட்​டம் மூலம், பயணி​கள் ரயில்​கள், சரக்கு ரயில்​களின் தடையற்ற போக்​கு​வரத்து உறுதி செய்​யப்​பட​ உள்​ளது.

இதுகுறித்​து ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறும்​போது, “நாட்​டின் ஒட்​டுமொத்த ரயில் போக்​கு​வரத்​தில் பெரும் பகு​தி​யைச் சுமக்​கும் 7 வழித்​தடங்​களும் சேர்ந்து மொத்​தம் 11 ஆயிரம் கி.மீ. தூரத்​தைக் கொண்​டுள்​ளன. இது, இந்​திய ரயில்​வே​யின் மொத்த வலைத்​தளத்​தில் (நெட்​வொர்க்​கில்) வெறும் 16 சதவீதம் மட்​டுமே. ஆனால், நாட்​டின் ஒட்​டுமொத்த ரயில் போக்​கு​வரத்​தில் 41 சதவீதப் போக்​கு​வரத்து நெரிசல் இந்த குறிப்​பிட்ட பாதைகளிலேயே நடை​பெறுகிறது. இதனால், இந்த​பாதைகளை நான்கு வழிப்​பாதைகளாக மாற்​று​வது அவசி​ய​மாகிறது” என்று தெரி​வித்​தார்.

அதன்​படி, நாட்​டின் முக்​கிய பெருநகரங்​களை இணைக்​கும் சென்னை - ஹவுரா (கொல்​கத்​தா), சென்னை - மும்​பை, டெல்லி - சென்​னை, டெல்லி - ஹவு​ரா, மும்பை - டெல்​லி, மும்பை - ஹவு​ரா, டெல்லி - குவாஹாட்டி ஆகிய 7 வழித்​தடங்​கள் இத்​திட்​டத்​தின் கீழ் நான்கு தண்​ட​வாளங்​கள் கொண்ட 4 வழிப்​பாதைகளாக விரி​வாக்​கப்​பட​ உள்​ளன. இதில் சென்​னையை மைய​மாகக் கொண்டு 3 வழித்​தடங்​கள் இடம்பெற்​றுள்​ளன.

இதுகுறித்​து ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: கூடு​தல் ரயில் பாதைகள் அமைக்​கப்​படு​வ​தால், எவ்வித சிக்​னல் காத்​திருப்​பும் இன்றி, தடையின்றி ரயில்

​களை இயக்க முடி​யும். இது தற்​போது உள்ள தண்​ட​வாளங்​கள் மீதான அதி​கப்​படி​யான அழுத்தத்தை குறைக்​கும். தற்​போதைய பாதைகளில் இடநெருக்​கடி​யால், புதிய ரயில்​களை இயக்க முடிவ​தில்​லை. 4 வழிப்​பாதை​யாக மாறும்​போது, கூடு​தல் வந்தே பாரத் ரயில்​கள், வழக்​க​மான அதி​விரைவு, விரைவு ரயில்​களை தாராள​மாக இயக்க முடி​யும்.

ரயில் போக்​கு​வரத்து மூலம் சரக்​கு​களைக் கொண்டு செல்ல குறைந்த செலவே ஆகும். இது, நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சிக்கு பெரும் பலம் சேர்க்​கும். எதிர்​காலத்​தில் அதி​கரிக்​க​ இருக்​கும் பயணி​கள் மற்​றும் சரக்குப் போக்​கு​வரத்​தின் மிகப்​பெரிய தேவையைச் சமாளிப்​ப​தற்​காக இந்த அதிநவீன விரி​வாக்​கப்​ பணி மேற்​கொள்​ளப்​பட உள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT