சென்னை: வீரமணி வீட்டில் சிறுமிகளின் உடல் புதைக்கப்பட்டதா என அவரது வீட்டு நீச்சல் குளத்தை தோண்டி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைதான பாலாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் வீரமணி வீட்டில் தோட்டம் உள்ள பகுதியில் 10 அடி ஆழத்துக்கு தோண்டி சோதனை நடத்தப்பட்டது. இதில் உடல் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, பாலா கூறியதன்பேரில் நீச்சல் குளம் உள்ள இடத்தை தோண்டி மீண்டும் சோதனை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.