பியூஷ் கோயல் | கோப்புப் படம்

 
தமிழகம்

“தமிழகத்தின் ஆன்மாவை ஸ்டாலின் குடும்பம் சிதைத்து விட்டது” - பியூஷ் கோயல் கடும் தாக்கு

செய்திப்பிரிவு

தமி​ழகத்​தின் ஆன்​மாவை ஸ்டா​லின் குடும்​பம் சிதைத்து விட்​டது என்று மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: தமிழக மக்​கள் மாற்​றத்தை விரும்​பு​கி​றார்​கள் என்​பது இந்​தத் தேர்​தல் களத்​தில் ஆணித்​தர​மாக உறு​தி​யாகி​விட்​டது. திமுக மற்​றும் காங்​கிரஸ் கட்​சிகள், மக்​கள் நலனுக்​காகப் பாடு​படும் கட்​சிகள் அல்ல.

அவை ஸ்டா​லின் குடும்​பத்​தா​லும், காந்தி குடும்​பத்​தா​லும் நடத்​தப்​படும் ‘பிரைவேட் லிமிடெட்’ நிறு​வனங்​கள். இத்​தகைய வாரிசு அரசி​யல் கலாச்​சா​ரத்தை தமிழக மக்​கள் ஒரு​போதும் மன்​னிக்க மாட்​டார்​கள். தமி​ழ​கத்​தின் இன்​றைய பின்​னடைவுக்கு இந்த இரண்டு குடும்​பங்​களே முழு முதற்​காரணம்.

திமுக அரசு ஊழலில் திளைக்​கிறது. வளர்ச்​சிப் பணி​களுக்​காகக் கரு​வூலத்​தில் ஒரு பைசாவைக் கூட இவர்​கள் மிச்​சம் வைக்​க​வில்​லை. ஸ்டா​லின், உதயநி​தி, சபரீசன் மற்​றும் கனி​மொழி என இந்​தக் குடும்​பத்​தினர் தமி​ழ​கத்​தின் ஆன்​மாவையே சிதைத்​து​விட்​டனர். சனாதன தர்​மத்தை டெங்கு போன்​றது என விமர்​சிப்​ப​தன் மூலம், உதயநிதி ஸ்டா​லின் தமி​ழ​கத்​தின் தொன்​மை​யான பண்​பாட்​டை​யும் ஆன்​மீகச் சிந்​தனையை​யும் நேரடி​யாகத் தாக்​கு​கி​றார்​. தேர்​தலுக்​காகக் கோயில்​களுக்​குச் செல்​வ​தால் மட்​டும் உங்​கள் பாவங்​களைக் கழு​வி​விட முடி​யாது.

மக்​களால் ஜனநாயக முறைப்​படி தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஒரு பிரதமரை, ‘பயங்​கர​வா​தி’ என்று அழைக்​கும் அளவுக்கு திமுக​வும் காங்​கிரஸும் தரம் தாழ்ந்​து​விட்​டன. மல்​லி​கார்​ஜுன கார்​கே​யின் இந்த வன்​ம​மான பேச்சை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன்.

உதயநிதி ஸ்டா​லினை அடுத்த முதல்​வ​ராக்க ஸ்டா​லின் துடிக்​கி​றார். தமிழ் கலாச்​சா​ரத்​துக்கு எதி​ராகப் பேசுபவரைத் துணை முதல்​வ​ராக்​கி​யுள்​ளனர். தமிழக மக்​களே, உங்​கள் எதிர்​காலத்​தை​யும் உங்​கள் பிள்​ளை​களின் எதிர்​காலத்​தை​யும் பாது​காக்க வேண்​டிய நேரம் இது. வாரிசு அரசி​யலை வீழ்த்​து​வோம், வளர்ச்​சி​யைத் தேர்ந்​தெடுப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT