திமுக அரசை கண்டித்து வெள்ளை அறிக்கையை பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், தேசிய செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ணன் அகர்வால், தமிழக பாஜக வல்லுநர்கள் பிரிவு மாநில அமைப்பாளர் சுந்தரராமன் ஆகியோர் சென்னை கமலாலயத்தில் நேற்று வெளியிட்டனர். படம்: எல்.சீனிவாசன்

 
தமிழகம்

தமிழகத்தில் வலுவான தொழில் துறை இருந்தும் அரசு கஜானா மட்டும் காலியாக இருப்பது ஏன்? - பியூஷ் கோயல் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் வலு​வான தொழில் துறை, கடுமை​யாக உழைக்​கும் தொழிலா​ளர்​கள், நிறைய வளங்​கள் இருந்​தும் அரசு கஜானா மட்​டும் காலி​யாக இருப்​பது ஏன் என்று முதல்​வர் ஸ்டா​லினுக்கு மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

தமிழக பாஜக சார்​பில் தயாரிக்​கப்​பட்​டுள்ள ‘தமிழக அரசின் நிதி நெருக்​கடி’ குறித்த வெள்ளை அறிக்​கையை சென்னை கமலால​யத்​தில் மத்​திய அமைச்​சரும், பாஜக மேலிடப் பொறுப்​பாள​ரு​மான பியூஷ் கோயல் நேற்று வெளி​யிட்​டார். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: வலு​வான தொழில் துறை, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள், கடுமை​யாக உழைக்​கும் விவ​சா​யிகள், மீனவர்​கள், திறமை​யான இளைஞர்​களைக் கொண்ட ஆசீர்​வ​திக்​கப்​பட்ட மாநிலம் தமிழகம். இங்கு அனை​வரும் பாடு​பட்டு உழைக்​கின்​றனர், வளங்​களை உரு​வாக்​கு​கின்​றனர். ஆனால், அரசின் கஜானா மட்​டும் காலி​யாக இருக்​கிறது. முதல்​வர் ஸ்டா​லினிடம் ஒரே ஒரு கேள்​வி.

          

இந்த பணமெல்​லாம் எங்கே போனது? தமிழக அரசின் கடன் வரலாறு காணாத அளவில் உயர்ந்​துள்​ளது. இது விரை​வில் ரூ.10 லட்​சம் கோடியைத் தாண்​டும் என்​கின்​றனர். இதுத​விர, மின்​வாரி​யம் போன்ற பொதுத் துறை நிறு​ வனங்​களுக்கு மட்​டும் சுமார் ரூ.2 லட்​சம் கோடி கடன் உள்​ளது. இதற்​கெல்​லாம் ஸ்டா​லினிடம் பதில் இல்​லை. அவர் போலித் தரவு​களைக் கூறி மக்​களின் கவனத்தை திசை​திருப்ப பார்க்​கிறார்.

இன்று தமிழக அரசு என்​பது ‘ஸ்​டா​லின் குடும்​பத்​தின் ஏடிஎம் மெஷின்’ போல செயல்​படு​கிறது. மு.க.ஸ்​டா​லின், உதயநிதி ஸ்டா​லின், கனி​மொழி, சபரீசன் என அந்த குடும்​பத்​தின் ஒவ்​வொரு உறுப்​பினரின் கையிலும் இந்த ஊழல் மற்​றும் கொள்​ளை​யின் கறை படிந்​திருக்​கிறது. திமுக​வின் நிர்​வாகத் திறமை​யின்​மை, ஊழலால் திவால் நிலையை நோக்கி தமிழகம் சென்று கொண்​டிருக்​கிறது.

மத்​திய அரசு ஜிஎஸ்டி இழப்​பீ​டாக மட்​டும் தமிழகத்​துக்கு ரூ.80 ஆயிரம் கோடிக்​கு மேல் வழங்​கி​யுள்​ளது. ஜிஎஸ்டி வரு​வதற்கு முன்பு 7 சதவீத​மாக இருந்த வரு​வாய் வளர்ச்​சி, இப்​போது ஜிஎஸ்​டி​யால் இரு மடங்​காக அதி​கரித்​துள்​ளது. அந்த பணமெல்​லாம் எங்கே போனது? தமிழக அரசு ஊழலில் முதல் இடத்​தில் இருக்​கிறது. டாஸ்​மாக் ஊழல் முதல் போதைப் பொருள் புழக்​கம் வரை அனைத்​துக்​கும் ஸ்டா​லின் குடும்​பமே பொறுப்​பு. தமிழகத்​தில் போதைப் பொருட்​கள் தாராள​மாக கிடைக்​கின்​றன. இது இளைஞர்​களின் எதிர்​காலத்​தைச் சீரழிக்​கிறது.

திமுக​வில் வாரிசு அரசி​யல் நடக்​கிறது. ஆனால், பாஜக​வில் அப்​படி இல்​லை. அடல் பிஹாரி வாஜ்​பாய் அல்​லது நரேந்​திர மோடி என யாருடைய குடும்​ப​மும் அரசி​யலில் இல்​லை. பாஜக​வில் உழைப்​பவர்​களுக்கு மட்​டுமே அங்​கீ​காரம்; வாரிசுகளுக்கு அல்ல. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்த நிகழ்ச்​சி​யில் கட்​சி​யின் மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மேலிடப் பொறுப்​பாளர்​கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்​டி, தேசிய செய்தி தொடர்​பாளர்​ கோபால​கிருஷ்ண அகர்​வால்​ உள்​ளிட்​ட நிர்​வாகிகள்​ கலந்​து கொண்​டனர்​.

SCROLL FOR NEXT