பியூஷ் கோயல்

 
தமிழகம்

தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பியூஷ் கோயலுடன் கூட்டணிக் கட்சியினர் சந்திப்பு

செய்திப்பிரிவு

தொகுதி ஒதுக்​கீடு தொடர்​பாக பியூஷ் கோயலுடன் கூட்​டணி கட்​சி​யினர் நேற்று ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டனர்.

தமி​ழ​கத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீட்டை இறுதி செய்​வதற்​காக, பாஜக மேலிடப் பொறுப்​பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்​துள்​ளார். நேற்று காலை கிண்டி ஓட்​டலில் நடை​பெற்ற ஆலோ​சனை​யில், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், முன்​னாள் மாநிலத் தலை​வர் தமி​ழிசை சவுந்​தர​ராஜன், அண்​ணா​மலை ஆகி​யோர் பங்​கேற்​ற​னர். இவர்​களு​டன் அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, விஜய​பாஸ்​கர் மற்​றும் புதிய நீதிக் கட்​சித் தலை​வர் ஏ.சி.சண்​முகம், தென்​னிந்​திய பார்​வர்டு பிளாக் கட்​சித் தலை​வர் திரு​மாறன் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​களும் பியூஷ் கோயலைச் சந்​தித்​துப் பேசினர்.

          

இந்த ஆலோ​சனை​யின் முடி​வில், ஏ.சி.சண்​முகத்​தின் புதிய நீதிக் கட்​சிக்கு 2 தொகு​தி​கள் வழங்க ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டிருப்​ப​தாகத் தெரி​கிறது. அதே​போல், மற்ற கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கான தொகு​தி​களும் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளன. தொடர்ந்​து, முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை​யும் பியூஷ் கோயலை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, கோவை மாவட்​டத்​தின் சிங்​காநல்​லூர் அல்​லது கவுண்​டம்​பாளை​யம் தொகு​தி​களில் ஏதே​னும் ஒன்றை தனக்கு ஒதுக்க வேண்​டும் என அண்​ணா​மலை விருப்​பம் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

அதே​போல், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​க​னும் வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக​வும், அது குறித்​தும் விரி​வான ஆலோ​சனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. பாஜக​வுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்ள 27 தொகு​தி​களில், அவை எந்​தெந்த தொகு​தி​கள், அதில் யார், யார் போட்​டி​யிடு​வது என்​பது குறித்து பியூஷ் கோயல் விரி​வாக ஆய்வு செய்​தார்.

ஏற்​கென​வே, பாஜக தரப்​பில் தொகு​தி​கள் அடை​யாளம் காணப்​பட்டு தயார் நிலை​யில் உள்​ளன. இதில் அதி​முக இறுதி செய்​யும் 27 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர் பட்​டியலை பியூஷ் கோயல் டெல்லி கொண்டு சென்று கட்​சித் தலை​மை​யிடம் சமர்ப்​பிக்​க​வுள்​ளார். டெல்லி மேலிடத்​தின் ஒப்​புதல் கிடைத்​தவுடன், அதி​காரப்​பூர்வ வேட்​பாளர் பட்​டியல் வெளி​யாகும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT