தமிழகம்

அண்ணாமலை ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை? - பியூஸ் கோயல் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: அண்​ணா​மலை ஏன் தேர்​தலில் போட்​டி​யிட​வில்​லை? என்​ப​தற்கு பாஜக மேலிடத் தேர்​தல் பொறுப்​பாளர் பியூஸ் கோயல் விளக்​கம் அளித்​துள்​ளார்.

சென்னை விமான நிலை​யத்​தில் பாஜக மேலிடத் தேர்​தல் பொறுப்​பாளர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பாஜக வேட்​பாளர் பட்​டியல் மாநிலக் குழு​வின் பரிந்​துரைகள் மற்​றும் ஒவ்​வொரு வேட்​பாளரின் விருப்​பத்​தின் அடிப்​படை​யில் மிகக் கவன​மாகத் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. யார் எந்​தத் திறனில், எங்கு பணி​யாற்ற விரும்​பு​கிறார்​கள் என்​பது முழு​மை​யாகக் கருத்​தில் கொள்​ளப்​பட்​டது.

          

பாஜக முன்னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை கட்​சி​யின் அர்ப்​பணிப்​புள்ள ஒரு போர்​வீரன். அவர் தன்னை ஒரு குறிப்​பிட்ட தொகு​திக்​குள் மட்​டும் முடக்​கிக்​கொள்ள விரும்​ப​வில்​லை. மாறாக தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் செய்து கட்​சி​யின் வெற்​றிக்​காகப் பணி​யாற்ற வேண்​டும் என்ற விருப்​பத்தை அவர் வெளிப்​படுத்​தி​னார். அதனால்​தான் அவர் இந்​தத் தேர்​தலில் போட்​டி​யிட​வில்​லை.

பாஜக​வின் தேர்​தல் அறிக்​கை​யின் முதல் வரைவு தயா​ராகி​விட்​டது. அதை நாங்​கள் ஆய்வு செய்து வரு​கிறோம். விரை​வில் டெல்லி மேலிடத்​துடன் கலந்​தாலோ​சித்​து, இன்​னும் சில தினங்​களில் அதி​காரப்​பூர்வ தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​படும். பாஜக வேட்​பாளர்​கள் அனை​வரும் இந்​தத் தேர்​தலில் அமோக வெற்றி பெறு​வார்​கள் என்ற நம்​பிக்கை எனக்கு இருக்​கிறது. தமிழகத்​தில் பழனி​சாமி தலை​மை​யிலும், மத்​தி​யில் பிரதமர் மோடி வழி​காட்​டு​தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி அடுத்த ஆட்​சியை அமைக்​கும். தமிழக மக்​கள் ஒரு பெரிய மாற்​றத்தை எதிர்​பார்க்​கிறார்​கள், அந்த மாற்​றத்​தைத் தேசிய ஜனநாயகக் கூட்​டணி நிச்​ச​யம் வழங்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்​நிலையில் அண்​ணா​மலை தனது எக்ஸ் தளபதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: 2026 தமிழ்​நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​காக அறிவிக்​கப்​பட்​டுள்ள தமிழக பாஜக​வின் வெற்றி வேட்​பாளர்​கள் அனை​வருக்​கும் எனது மனமார்ந்த வாழ்த்​துகள். ஊழல், மெத்​தனப் போக்கு மற்​றும் திமுக​வின் துரோகத்​தால் சோர்​வடைந்​துள்ள தமிழகத்​தின் ஒவ்​வொரு சகோதர சகோ​தரி​யின் ஆதர​வை​யும் அவர்​கள் பெற்​றுள்​ளனர். பிரதமர் மோடி​யின் தொலைநோக்கு தலை​மை​யின் கீழ், இந்​தியா வலிமை, வளர்ச்சி, குறிக்​கோளு​டன் முன்​னேறி​யுள்​ளது. திமுக அரசால் தமிழகம் பின்​னுக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளது. வரவிருக்​கும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி 210 இடங்​களை வெல்ல வேண்​டும் என்ற இலக்​குடன், ஒரு சாதாரண தொண்​ட​னாகநான் அனைத்து பாஜக மற்​றும் பிற கூட்​ட​ணிக் கட்சி வேட்​பாளர்​களு​டன் தோளோடு தோள் நின்று பணியாற்று​வேன் என அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT