அமைச்சர் ராஜ்மோகன்

 
தமிழகம்

“பள்ளிகளில் இனி வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படும்” - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: “பள்ளிகளில் இனி வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படும்” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். இதற்காக, தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், “இனி வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகளை நடத்தப்படும். அதற்கு வழிவகை செய்யும் திருத்திய கால அட்டவணை வெளியிடுகிறோம். இனி தினந்தோறும் மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படும். உடற்கல்வி வகுப்புகளைக் காட்டாயமாக ஒதுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அந்த வகுப்புகளை நிறுத்தக்கூடாது.

மாணவர்கள் உடற்பயிற்சி வகுப்புக்குச் செல்ல ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதற்கான மைதானங்கள், பயிற்சி, விளையாட்டு உபகரணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் 2 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக நான் கண்டறிந்தேன்.

ஒரு உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடம்கூட இருக்கக்கூடாது என நான் உத்தரவிட்டுள்ளேன். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. திருத்திய கால அட்டவணை மூலம் மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி வகுப்புகள் கிடைத்துள்ளது. சாதி, மதம், நிறம், விளையாட்டு திறன், உயரம், குள்ளம் என எதற்காகவும், எந்தக் குழந்தையையும் விளையாட்டில் இருந்து ஒதுக்கி வைக்காதீர்கள்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT