படங்கள்: நா.தங்கரத்தினம்

தமிழகம்

புகைப்படத் தொகுப்பு: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்ட தீபமும், பக்தர்களின் ஆர்ப்பரிப்பும்

நா.தங்கரத்தினம்

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் திரண்ட பக்தர்கள் ‘அரோகரா’ கோஷமிட்டு ஆர்ப்பரித்தனர். 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை நேரில் பார்ப்பதற்காக காலை முதலே உள்ளூர் பக்தர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள், இந்து அமைப்பினர், நிர்வாகிகள் திருப்பரங்குன்றத்தில் திரண்டனர். பக்தர்கள் மலைப் பாதை வழியாக செல்ல முயற்சித்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியது சிஆர்பிஎஃப்.

அதேவேளையில், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன், ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ் உள்ளிட்ட 50 பேர் கொண்ட குழுவினர் மலையில் ஏறிச் சென்றனர். தீபத்தூணியில் கற்பூரக் கட்டிகள் வைத்து சிவாச்சாரியர்கள் பூஜை செய்தனர். தீபத்தூணை சுற்றி அமைக்கப்பட்ட மேடையில் ஏறிய நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் சரியாக 5 மணியளவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்றினர்.

மலையடிவாரத்தில் 16 கால் மண்டபம், திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம், கோட்டைத் தெரு, சந்நிதி தெரு, பசுமலை - திருமங்கலம் சாலையில் திரண்டிருந்த பக்தர்கள், பொதுமக்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை பார்த்து பரவசமடைந்தனர்.

இந்து அமைப்பினர் தீபம் ஏற்றப்பட்டதை வரவேற்று தீபாவளி பண்டிகைபோல் பட்டாசு வெடித்து ஆர்ப்பரித்தனர்.

பக்திப் பாடல்கள் பாடியும், ஆட்டம், பாட்டத்துடன் மகிழ்ச்சியை ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். சில இடங்களில் பஜனை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

பக்தர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள், பிரசாதம் வழங்கி தீபம் ஏற்றியதை கொண்டாடினர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதைக் கோலாகலமாகக் கொண்டாடிய பக்தர்கள்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்.

மலைமீது செல்ல முயன்ற பக்தர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் போலீஸார் தடுத்ததால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.

மதுரை திருப்பரங்குன்றம் மலையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT