தமிழகம்

தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்: பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து விற்​பனை நிலை​யங்களுக்​கும் தடை​யின்றி எரிபொருள் விநி​யோகம் செய்​யப்​படு​வ​தாக​வும், எரிபொருள் தட்​டுப்​பாடு குறித்த வதந்​தி​களை நம்ப வேண்​டாம் என்​றும் தமிழ்​நாடு பெட்​ரோலி​யம் டீலர்​கள் சங்​கம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அச்​சங்​கத்​தின் தலை​வர் கே.பி.​முரளி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் முழு​வதும் பெட்​ரோல் மற்​றும் டீசல் தட்​டுப்​பாடின்றி கிடைப்​பதை தமிழ்​நாடு பெட்​ரோலி​யம் டீலர்​கள் சங்​கம் உறு​திப்​படுத்​துகிறது.

          

பொதுத் துறை எண்​ணெய் நிறு​வனங்​களான இந்​தி​யன் ஆயில், பாரத் பெட்​ரோலி​யம், இந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் ஆகியவை அனைத்து சில்​லறை விற்​பனை நிலை​யங்​களுக்​கும் தடை​யின்றி எரிபொருளை விநி​யோகம் செய்து வரு​கின்​றன.

தமிழகத்​தில் உள்ள அனைத்து பெட்​ரோல் நிலை​யங்​களி​லும் போது​மான அளவு பெட்​ரோல் மற்​றும் டீசல் இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. சமூக வலை​தளங்​களில் பரவும் தவறான தகவல்​களைப் பொது​மக்​கள் நம்ப வேண்​டாம் என கேட்​டுக்​கொள்​கிறோம்.

தட்​டுப்​பாடு ஏற்​படும் என்ற அச்​சத்​தில் மக்​கள் அவசர​மாகத் தேவைக்கு அதி​க​மாக எரிபொருள் நிரப்​புவதைத் தவிர்க்​கு​மாறு கேட்​டுக்​கொள்​கிறோம். உங்​கள் அன்​றாடத் தேவைக்கு ஏற்ப வழக்​கம் போல எரிபொருளைப் பெற்​றுக்​கொள்​ளலாம்.

பொது​மக்​களுக்​குத் தடையற்ற மற்​றும் நம்​பக​மான எரிபொருளை வழங்க எங்​களின் அனைத்து டீலர்​களும், எண்​ணெய் நிறு​வனங்​களும் முழு அர்ப்​பணிப்​புடன் செயல்​பட்டு வரு​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT