தமிழகம்

திருப்பரங்குன்றம் தொடர்பான அவமதிப்பு வழக்கில் அமைச்சர் ரகுபதியை சேர்க்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்​திகை தீப வழக்​கில் தமிழக அமைச்​சர் ரகுபதி மீதும் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​றக் கோரி ராம.ரவிக்​கு​மார், பரமசிவம் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​களை விசா​ரித்த தனி நீதிப​தி, மலை உச்​சி​யில் உள்ள தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என உத்​தர​விட்​டார்.

          

இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத​தால் மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர், காவல் துணை ஆணை​யர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு மீதான விசா​ரணை நிலு​வை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில், திருப்பரங்குன்றம் விவ​காரத்​தில் தமிழக அமைச்​சர் ரகுபதி மீதும் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக் கோரி, மனு​தா​ரர்​களில் ஒரு​வ​ரான பரமசிவம் தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நேற்று மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக வழக்​கறிஞர் சுப்​பையா கூறிய​தாவது: திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி கார்த்​திகை தீபம் ஏற்​றப்​பட​வில்​லை.

இதனால் நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் பிப். 2-ல் விசா​ரணைக்கு வந்​த​ போது மதுரை ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், காவல் ஆணை​யர் லோக​நாதன், செயல் அலு​வலர் நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகி, நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றாததற்கு மன்​னிப்பு கோரினர்.

பின்​னர் நீதிப​தி, காவல் ஆணையர் லோக​நாதன், துணை ஆணை​யர் இனிகோ திவ்​யன், செயல் அலு​வலர் யக்​ஞ​நா​ராயணன் ஆகியோர் அடுத்த விசா​ரணை​யின் போது நீதி​மன்​றத்​தில் ஆஜராகு​வ​தில் இருந்து விலக்கு அளித்​தும், மார்ச் 2-ல் மாவட்ட ஆட்​சி​யர் பிர​வின்​கு​மார் ஆஜராகு​மாறும் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் அமைச்​சர் ரகுப​தியை சேர்க்​கக் கோரி மனு தாக்​கல் செய்​துள்​ளோம். இந்த மனு விசா​ரணைக்கு வந்​த​போது சட்​டம்​-ஒழுங்கு பிரச்​சினை ஏற்​பட்​ட​தால் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்​றாமல் 144 தடை உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​ட​தாக அதி​காரி​கள் கூறினர்.

ஆனால், அமைச்​சர் ரகுபதி திருப்பரங்குன்றம் உத்​தரவை நடை​முறைப்​படுத்​தக் கூடாது என்​ப​தற்​காகவே 144 உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது என்​றார். அவர் மேலும் கூறும்​போது, 144 தடை உத்​தரவு பிறப்​பிக்​காமல் இருந்​தால், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்​தி​கையன்று தீபம் ஏற்றி இருப்​பார்​கள் என்​றும், அப்​படி தீபம் ஏற்றி இருந்​தால் அதுவே வழக்​க​மாக மாறி​விடும் என்​ப​தால்​தான் தடுத்​தோம் என்​றும் பேட்டி அளித்​துள்​ளார்.

இதனால் அமைச்​சர் ரகுப​தி​யை​யும் நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் சேர்க்க கோரி​யுள்​ளோம். அந்த மனுவுக்கு வழக்கு எண் வழங்​கப்​பட்​டுள்​ளது. மார்ச் 2-ல் பிர​தான நீதி​மன்ற அவம​திப்பு மனு விசா​ரணைக்கு வரும்​போது, இந்த மனு​வும் விசா​ரணைக்கு எடுக்க வாய்ப்​புள்ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT