சென்னை: அதிமுகவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கோரி அக்கட்சியின் சார்பில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 10-ம் தேதி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவுக்கும் - திமுகவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகப் பேசி இருந்தார். இது அதிமுகவின் பெயருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாக, கூறி அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதி ராஜாராம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், “மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் இரட்டை இலை அல்லது சுயேச்சை சின்னத்துக்குப் பதிலாக திமுகவின் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டதாகவும், பதிலுக்கு திமுகவினர் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டதாகவும், சுமார் 70 லட்சம் பணப்பட்டுவாடா மூலம் வாக்குகள் மாற்றப்பட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா பேசி இருந்ததார்” என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எந்தவித ஆதாரமுமின்றி, உள்நோக்கத்தோடு கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அதிமுக தொண்டர்களைக் தனது கட்சிக்கு இழுக்கும் நோக்கிலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்” எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த மனு வரும் அக்டோபர் 21-ம் தேதி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.