பெரும்பத்து கிராம மக்கள் வாக்குப் பதிவை புறக்கணித்ததால் வாக்குச் சாவடி வெறிச்சோடியது. | | படம்: மு. லெட்சுமி அருண் |

 
தமிழகம்

நாங்குநேரி அருகே இரட்டை கொலை நடந்த பெரும்பத்து, வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: ​திருநெல்​வேலி மாவட்​டம் நாங்குநேரி அருகே பெரும்​பத்து கிராம மக்​கள் வாக்​குப்​ப​திவை புறக்​கணித்​த​தால் வாக்​குச்​சாவடி வெறிச்​சோடியது.

இக்​கி​ராமத்​தில் கடந்த சில மாதங்களுக்​கு​ முன் 6 பேர் அரி​வாளால் சரமாரியாக வெட்​டப்​பட்​ட​தில் 2 பேர் உயி​ரிழந்​தனர். மற்ற 4 பேர் பலத்த காயமடைந்​தனர். இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிந்து 9 பேரை கைது செய்​திருந்​தனர்.

இந்த விவ​காரத்​தில் அரசுத்​தரப்​பும், காவல்​துறை​யும் உரிய நடவடிக்கை எடுக்​க​வில்லை என்​றும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உரிய இழப்​பீடு வழங்​க​வில்லை என்​றும் தெரி​வித்​து, பெரும்​பத்து இந்​திரா காலனி கிராம மக்​கள் தேர்​தலை புறக்​கணிப்​ப​தாக ஏற்​கெனவே தெரி​வித்​திருந்​தனர்.

அவர்​களு​டன் அதி​காரி​கள் பேச்​சு​ நடத்​தியும் உடன்​பாடு எட்​ட​ப்படவில்​லை. இங்​குள்ள டிடிடிஏ தொடக்​கப் பள்​ளி​யில் வாக்​குச்​சாவடி அமைக்​கப்​பட்​டிருந்​தது.

பெரும்​பத்து கிராமத்​தில் 471 ஆண்​கள், 498 பெண்​கள் என்று மொத்​தம் 969 வாக்​காளர்​கள் உள்​ளனர். அவர்​களில் 3 பேர் மட்​டுமே நேற்று பிற்​பகல் வரை​யில் வாக்​களித்​திருந்​தனர்.

இதே​போல் புதுக்​கோட்டை மாவட்​டம் வேங்​கைவயல் கிராம மக்​களும் தேர்​தலை புறக்​கணித்​தனர். புதுக்​கோட்டை மாவட்​டம் வேங்​கைவயல் மேல்​நிலை நீர்த்​தேக்​கத் தொட்​டி​யில் 2022-ம் ஆண்​டில் மனிதக் கழிவு கலந்​தது தெரிய​வந்​தது.

இந்த செயலை இறையூர் மக்​கள் செய்​த​தாக வேங்​கைவயல் மக்​களும், வேங்​கைவயல் மக்​கள் செய்​தாக இறையூர் மக்​களும் பரஸ்பரம் குற்​றம்​சாட்டி வந்​தனர். இதன்​பேரில் இருதரப்​பினருக்கு இடையே அடிக்​கடி பிரச்​சினை ஏற்​பட்டு வந்​தது.

இந்​நிலை​யில், இச்​சம்​பவத்​தில் குற்​ற​வாளி​களை கைது செய்ய வேண்​டும். வழக்கு பதிந்​ததை ரத்து செய்ய வேண்​டும் என வலி​யுறுத்தி இரண்டு ஊர் மக்​களும் தேர்​தல் புறக்​கணிப்பு செய்​வ​தாக அறி​வித்து இருந்​தனர். இருதரப்​பிலும் சில அரசி​யல் கட்​சி​யினர் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

இதையடுத்து இறையூர் மக்​கள் தங்​கள் முடிவை மாற்​றிக்​கொண்டு நேற்று வாக்​களித்​தனர். வேங்​கைவயல் மக்​கள் வாக்​களிக்​காமல் புறக்​கணித்​தனர்.

மேலும், எதிர்ப்பை தெரிவிக்​கும் வகை​யில் வேங்​கைவயலில் கருப்​புக் கொடி கட்டி வைக்​கப்​பட்​டிருந்​தது. இதனிடையே கடைசி நேரத்தில் வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர் வாக்களித்தனர்.

மேலும் இரு கிராமங்கள்

இது​போல், தூத்​துக்​குடி மாவட்​டம் எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாய்​பட்டி கிராமத்​தில் உள்ள இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமை இடமாற்​றம் செய்​யக்கோரி​ இக்​கி​ராமத்​தினர் தேர்​தல் புறக்​கணிப்​பில் ஈடு​பட்​டனர்.

தூத்​துக்​குடி மாவட்​டம் ஓட்​டப்​பி​டாரம் தொகுதி பொட்​டலூரணி கிராமத்​தில் இயங்​கும் மீன் கழிவு ஆலை​யைக் கண்டித்து கிராம மக்​கள் தேர்தலை புறக்​கணித்​தனர்.

SCROLL FOR NEXT