இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்

 
தமிழகம்

சட்டப்பேரவையில் தனிப்பட்ட தாக்குதல் ஏற்புடையதல்ல: மு.வீரபாண்டியன் கருத்து

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை: சட்​டப்​பேர​வை​யில் தனிப்​பட்ட முறையிலான தாக்​குதலில் ஈடு​படு​வது ஜனநாயகத்​துக்கு ஏற்புடையது அல்ல என்று இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கூறினார்.

விருதுநகர் மாவட்​டம் திருச்​சுழி அருகே செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சட்​டப்பேர​வை​யில் தனிப்​பட்ட முறையிலான தாக்​குதலில் ஈடுபடு​வது ஜனநாயகத்​துக்கு ஏற்​புடையது அல்ல.

சட்​டப்​பேரவை​யில் யாரை​யும் தாழ்த்​திப் பேசக்​கூ​டாது. உடல் மொழி​யால் விமர்​சிக்​கக் கூடாது. பண்பு தவறிய வார்த்தைகளைப் பயன்​படுத்​தக் கூடாது. உயர் பொறுப்​பில் இருப்பவர்கள் கூடு​தல் கவன​மாக இருக்க வேண்​டும்.

தந்தையைத் தேடுகிறேன் என முதல்​வர் கூறியது ஏற்​புடையது அல்ல. அதே​போல், அதற்கு எதிர்க்​கட்​சித் தலை​வர் முதல்​வரின் தனிப்​பட்ட வாழ்க்கை​யைப் பற்றி பேசி​யதும் ஏற்​புடையது அல்ல.

மக்​கள் பிரச்​சினை​கள் ஏராள​மாக இருக்​கின்​றன. அதைப் பற்றி நாம் சிந்​திக்க வேண்​டும் என்​பது​தான் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நிலைப்​பாடு. மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லையென்று சொன்னாலும் தவெக அரசு மாநில உரிமை​களுக்​காகப் போராட வேண்டும். இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT