சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் குற்றப்பிரிவு போலீஸார். படம்: எஸ். குரு பிரசாத்.

 
தமிழகம்

கல்வி நிறுவனங்களில் முறைகேடு வழக்கு: முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

செய்திப்பிரிவு

சேலம்: கல்வி நிறு​வனங்​கள் புதுப்​பித்​தல், அனுமதிக்கு முறைகேடாக பணம் வாங்​கிய வழக்​கில் கைதான முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமாரை ஒருநாள் காவலில் எடுத்து விசா​ரிக்க சேலம் மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸாருக்கு சேலம் நீதி​மன்​றம் அனுமதி அளித்​துள்​ளது.

தமிழகம் முழு​வதும் தனியார் பள்​ளி​களுக்கு அனுமதி மற்​றும் புதுப்​பித்​தலுக்கு முறைகேடாக பணம் பெற்​றதாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டு முன்​னாள் கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஷ் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்த வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஷின் நெருங்​கிய நண்​பரான திருச்​சி​யைச் சேர்ந்த முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமார், நங்​கவள்​ளியை சேர்ந்த தினேஷ், சென்​னையைச் சேர்ந்த அரசகுமார் ஆகியோ​ரும் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில் சேலத்​தில் உள்ள சில தனியார் பள்​ளி​களுக்கு புதுப்​பித்​தல் மற்​றும் புதிதாக பள்ளி தொடங்​கு​வதற்கு அனுமதி வழங்​கு​வதில் முத்​துக்​குமார் பள்ளி நிர்​வாகத்​திடம் முறைகேடாக பணம் பெற்​றதாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

இது​தொடர்​பாக சங்​ககிரி கொங்கு மெட்​ரிக் பள்ளி நிர்​வாகி தமிழ்​மணி, சங்​ககிரி வித்​யாசாகர் மெட்​ரிக் பள்ளி நிர்​வாகி பிரகாஷ், பெரியார் நர்​சரி பள்ளி நிர்​வாகி சங்​கர் ஆகியோர் மாவட்ட குற்​றப்​பி​ரிவு போலீ​ஸில் ஏற்​கெனவே புகார் செய்​திருந்​தனர்.

இதன் அடிப்​படை​யில், அரசகுமார், தினேஷ் ஆகியோரிடம் மாவட்ட குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்தி முடித்​துள்​ளனர். இதில், முத்​துக்​குமாரை 2 நாள் காவலில் எடுத்து விசா​ரணை செய்ய சேலம் குற்​றவியல் நடுவர் நீதி​மன்​றம் எண் 6-ல் போலீ​ஸார் மனு தாக்​கல் செய்​திருந்​தனர். இதற்​காக சென்னை புழல் சிறை​யில் இருந்து முத்​துக்​குமாரை போலீ​ஸார் நேற்று சேலம் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர்.

முத்​துக்​குமாரை 2 நாள் காவலில் எடுத்து விசா​ரணை செய்ய வேண்​டும் என நீதி​மன்​றத்​தில் அனுமதி கோரினர். இதில் ஒருநாள் காவலில் எடுத்து விசா​ரிக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதையடுத்து முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமாரை சேலம் ஒருங்​கிணைந்த நீதி​மன்​றத்​தில் இருந்து போலீ​ஸார் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​றனர். யார் யாரிடம் எவ்​வளவு தொகை பெறப்​பட்​டது உள்​ளிட்ட முக்​கிய கேள்​வி​களு​டன் போலீ​ஸார் விசா​ரணையை தொடங்க உள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT