மதுரை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்தை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போலீஸார். படம்: நா. தங்கரத்தினம்.

 
தமிழகம்

‘நிஷாந்த்’தை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: தந்தைக்கும், தோழிக்கும் தொடர்பில்லை என நீதிபதியிடம் தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை நகைக்​கடை கொள்ளை வழக்​கில் கைதான யூடியூப்​பர் ‘நிஷாந்த்’தை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிக்க நீதி​மன்​றம் அனுமதி வழங்​கி​யுள்​ளது.

மதுரை பைபாஸ் ரோடு ‘தனிஷ்க்’ நகைக்​கடை​யில் கடந்த நவ. 12-ல் சுமார் ரூ.15 கோடி மதிப்​பிலான 11.384 கிலோ தங்க நகைகள் கொள்​ளை​யடிக்​கப்​பட்​டன. எஸ்.எஸ்.காலனி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து பழங்​காநத்​தத்​தைச் சேர்ந்த யூடியூபர் நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், நிஷாந்​தின் தோழியும், இன்ஸ்டா பிரபலமுமான திருப்​பாலை பார்க் டவுன் பகுதியை சேர்ந்த மீனாட்சி ஆகியோரை கைது செய்து, அவர்​களிடம் இருந்து நகைகளை மீட்​டனர். மூவரும் மதுரை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், நிஷாந்த்தை 5 நாட்​கள் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதி கோரி மதுரை மாவட்ட நீதி​மன்​றத்​தில் எஸ்.எஸ்.காலனி போலீ​ஸார் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனு முதலா​வது விரைவு நீதி​மன்ற நீதிபதி ராஜபிரபு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

போலீஸ் தரப்​பில், ‘இது முக்​கிய கொள்ளை வழக்கு. நிஷாந்த் பல நாட்​கள் திட்​ட​மிட்டு கொள்​ளை​யடித்​துள்​ளார். இவ்​வளவு பெரிய கொள்​ளை​யில் நிஷாந்த் ஒரு​வர் மட்​டுமே ஈடு​பட்​டிருப்​பாரா என்ற சந்​தேகம் உள்​ளது. கொள்​ளைக்கு பிறகு நிஷாந்த் தப்​பிச் செல்ல சிலர் உதவி செய்​துள்​ளனர். எனவே காவலில் எடுத்து விசா​ரித்​தால் மட்​டுமே முழு உண்​மையும் தெரிய​வரும்’ என்​றனர்.

அப்​போது நீதிபதி, நிஷாந்​திடம் போலீஸ் காவல் கேட்​டுள்​ளனர். என்ன சொல்​கிறீர்​கள் என கேட்​டார். அதற்கு அவர், “நகைகள் முழு​வதையும் கொடுத்​து​விட்​டேன். 5 நாள் காவல் வேண்​டாம். பய​மாக இருக்​கிறது. ஒருநாள் போதும். கொள்​ளை​யில் என் தந்தை சுரேஷ், தோழி மீனாட்சி ஆகியோ​ருக்கு தொடர்​பில்லை” என்​றார்.

பின்​னர் நீதிபதி, ‘நிஷாந்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதி அளிக்​கப்​படு​கிறது. விசா​ரணை​யின்​போது எந்​த​வித துன்​புறுத்​தலுக்​கும் ஆளாக்​கக் கூடாது. சட்​டத்​துக்கு உட்​பட்டு விசா​ரணை நடத்த வேண்​டும், வழக்​கறிஞரை சந்​திக்க அனுமதி அளிக்க வேண்​டும்’ என உத்​தர​விட்​டார். இதையடுத்து போலீ​ஸார் நிஷாந்தை மருத்​துவ பரிசோதனைக்​காக அரசு ராஜாஜி மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர். பின்​னர் விசா​ரணைக்​காக அவரை அழைத்​துச் சென்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT