தமிழகம்

செந்தூர் விரைவு ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைப்பு: ஜூன் 15 முதல் அமலுக்கு வருகிறது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்​பூர்- திருச்செந்தூர் இடையே இயக்​கப்​படும் செந்தூர் விரைவு ரயி​லில் கூடு​தலாக 5 பெட்​டிகள் நிரந்​தர​மாக இணைக்​கப்​பட​வுள்​ளது. இதன் மூலம், 18 பெட்​டிகளில் இருந்து 23 பெட்​டிகளாக அதி​கரிக்​கப்​படு​கிறது. கூடு​தல் பெட்​டிகள் இணைப்பு ஜூன் 15-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​படு​கிறது.

முரு​கக் கடவுளின் அறு​படை வீடு​களில் 2-ம் படை வீடாக திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் உள்​ளது. இக்​கோ​யிலுக்கு தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​கள், அண்டை மாநிலங்​களில் இருந்து நாள்​தோறும் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வந்து செல்​கின்​றனர்.

சென்​னை​யில் இருந்து திருச்​செந்​தூருக்கு செல்​லும் பக்​தர்​கள் வசதிக்​காக, செந்​தூர் விரைவு ரயில் இயக்​கப்​படு​கிறது. இந்த ரயில் தினசரி மாலை சென்னை எழும்பூரில் இருந்து புறப்​பட்​டு, மறு​நாள் காலை திருச்​செந்​தூரை சென்​றடைகிறது. இந்த ரயிலுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு உள்​ளது.

பயணிகள் நெரிசல்

இருப்​பினும், இந்த ரயில் 18 பெட்​டிகளு​டன் இயக்​கப்​படு​வ​தால், பல நேரங்​களில் பயணி​கள் நெரிசலுடன் பயணிக்​கும் நிலை இருக்​கிறது.

எனவே, இந்த ரயி​லில் கூடு​தல் பெட்​டிகள் இணைத்து இயக்க ஏபிஜிபி நுகர்​வோர் அமைப்பு உட்பட பல்​வேறு தரப்​பினர் கோரிக்கை விடுத்​தனர். இதை தெற்கு ரயில்வே நிர்​வாகம் பரிசீலித்​து, கூடு​தலாக 5 பெட்​டிகள் நிரந்​தர​மாக இணைத்​து, 18-ல் இருந்து 23 பெட்​டிகளாக இயக்கப்பட உள்​ளது.

அதன்​படி, முதல் வகுப்பு ஏசி பெட்​டி, இரண்​டடுக்கு ஏசி பெட்டி தலா ஒன்​று, மூன்​றடுக்கு ஏசி பெட்டி 3, இரண்​டாம் வகுப்பு 3 அடுக்கு தூங்​கும் வசதி பெட்டி 12, பொது பெட்டி 4, லக்​கேஜ் வகுப்​புடன் பொது பெட்டி 2 என மொத்​தம் 23 பெட்​டிகள் இணைக்​கப்​பட​வுள்​ளன. கூடு​தல் பெட்​டிகள் இணைப்பு ஜூன் 15-ம் தேதி முதல்​ நடை​முறைக்​கு வரு​கிறது.

SCROLL FOR NEXT