ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நேற்று நடைபெற்றது. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள் ரெங்கமன்னார்.

 
தமிழகம்

ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோலாகலம்

14-ம் தேதி தேரோட்ட விழாவுக்கு சிறப்பு ஏற்பாடு

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீ​வில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயில் ஆடிப்​பூரத் திரு​விழா​வில் பெரி​யாழ்​வார் மங்​களா​சாசன உற்​சவம் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் பிரசித்தி பெற்ற ஆடிப்​பூரத் தேரோட்​டத் திரு​விழா ஆக.6-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முதல் நாள் இரவு 16 வண்டி சப்​பர​மும், 4-ம் நாள் விழா​வான நேற்று முன்​தினம் இரவு ரெங்​கமன்​னார் கோவர்த்​தனகிரி கிருஷ்ணர் அலங்​காரத்​தி​லும், ஆண்​டாள் சேஷ வாக​னத்​தி​லும் எழுந்​தருளிபக்​தர்​களுக்கு அருள் பாலித்​தனர்.

விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களில் ஒன்​றான பெரி​யாழ்​வார் மங்​களா​சாசனம் நேற்று நடை​பெற்​றது. அதி​காலை 12 மணி அளவில் ஆடிப்​பூரக் கொட்​டகை​யில் பெரி​யாழ்​வார் எழுந்​தருளி​னார். அதன்​பின் தனித்​தனி பல்​லக்​கில் எழுந்​தருளிய பெரிய பெரு​மாள், கள்ளழகர் கோயில் சுந்​தர்​ராஜ பெரு​மாள், திரு​வண்​ணா​மலை ஸ்ரீநி​வாசப் பெரு​மாள், நின்ற நாராயணப் பெரு​மாள் கோயில் திருத்​தங்​கல் அப்​பன் ஆகியோ​ருக்கு பெரி​யாழ்​வார் மங்​களா​சாசனம் செய்து வைத்​தார்.

அதை தொடர்ந்து மூக்​குத்தி சேவை​யில் ரெங்​கமன்​னார் உடன் எழுந்​தருளிய ஆண்​டாள் தாயாருக்கு பெரி​யாழ்​வார் மங்​களா​சாசனம் செய்து வைத்​தார். இதனை ஆயிரக்கணக்​கான பக்​தர்​தரிசனம் செய்​தனர்.

இரவு 10 மணிக்கு மேல் 5 கருடசேவை நடை​பெற்​றது. இதில் 5 பெருமாள்களும் கருட வாகனங்​களி​லும், ஆண்டாள் பெரிய அன்ன வாக​னத்​தி​லும், பெரி​யாழ்​வார் சிறிய அன்ன வாக​னத்​தி​லும் எழுந்​தருளி, ரத வீதி​களில் வீதி உலா வந்தனனர்.

7-ம் நாள் விழா​வான நாளை (ஆக.12) இரவு கிருஷ்ணன்​கோ​விலில் ஆண்​டாள் மடி​யில் ரெங்​கமன்​னார் சயனத்​திருக்​கும் சயன சேவை உற்​சவம் நடை​பெறுகிறது. உச்ச நிகழ்​வான ஆடிப்​பூரத் தேரோட்ட விழா ஆக14-ம் தேதி நடை​பெறுகிறது. விழாவுக்​கான சிறப்பு ஏற்​பாடு​களை செயல் அலு​வலர் சர்க்​கரை​யம்​மாள் மற்​றும் அறநிலை​யத்​துறை அதி​காரி​கள்​ செய்​து வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT