நேபாளத்திலிருந்து நேற்று கோவை திரும்பிய யாத்ரீகர்கள்.

 

படம்: ஜெ.மனோகரன்

தமிழகம்

‘நாங்கள் உயிர் பிழைத்த கதை...’ - நேபாளத்தில் இருந்து கோவை திரும்பியவர்கள் உருக்கம்

டி.ஜி.ரகுபதி

கோவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை ஒருநாளைக்கு முன்பு கடந்ததால் உயிர் தப்பினோம் என, நேபாளத்தில் இருந்து கோவை திரும்பியவர்கள் தெரிவித்தனர்.

கோவை, திருப்​பூர் மாவட்​டங்​களைச் சேர்ந்த 39 பேர் ஆன்​மிக பயண​மாக கைலாய யாத்​திரைக்கு நேபாளம் சென்​றிருந்​தனர். இவர்​கள் அங்கு ஏற்​பட்ட வெள்​ளத்​தில் சிக்கி மாய​மான​தாக தகவல்​கள் வெளி​யாகின.

இந்​நிலை​யில், இதில் 28 பேர் நேற்று விமானத்​தில் கோவை திரும்​பினர். அவர்​களை கோவை மாவட்ட வருவாய் அலு​வலர் சுரேந்​திரன், யாத்​திரை சென்​றவர்​களின் குடும்​பத்​தினர், உறவினர்​கள் கண்​ணீர் மல்க வரவேற்​ற​னர்.

கிருஷ்ணகு​மார் என்​பவர் கூறும்​போது, ‘‘ஆகஸ்ட் 18-ம் தேதி திருக்​கைலாய யாத்​திரைக்கு 38 பேரை அழைத்​துச் சென்​றேன். இன்று நல்​லபடி​யாக அனை​வ​ரும் திரும்​பி​யுள்​ளோம்.

வெள்​ளம் ஏற்​படு​வதற்கு முன்​பு, நாங்​கள் குறிப்​பிட்ட இடத்தை கடந்து சென்று விட்​டோம். அதன் பின்​னர், தொலை​தொடர்பு துண்​டிக்​கப்​பட்​ட​தால் உடனடி​யாக என்​னால் யாரை​யும் தொடர்பு கொள்ள முடிய​வில்​லை. மத்​திய, மாநில அரசு அதி​காரி​கள் தொடர்ந்து எங்​களிடம் விசா​ரித்து நில​வரங்​களை கேட்டு முழு​மை​யாக ஒத்​துழைத்​தனர்.

மானசரோவர் பகு​தி​யில் இருக்​கும் போது​தான் எங்​களுக்கு வெள்ள பாதிப்பு தகவல் தெரிய​வந்​தது. 39 பேர் சென்​ற​தில் 5 பேர் மட்​டும் இன்று மாலை சென்​னைக்கு வரு​கின்​ற​னர். மற்ற அனை​வ​ரும் திரும்பி விட்​டோம்’’ என்​றார்.

பிரேமா என்​பவர் கூறும்​போது, ‘‘நே​பாள வெள்ள பாதிப்பு குறித்து அறிந்த நாங்​கள் பெரும் துயரத்​துக்​குள்​ளானோம். நாங்​கள் வெள்​ளம் பாதிக்​கப்​பட்ட பகு​தியை ஒரு நாளைக்கு முன்​னர் தான் கடந்​திருந்​தோம். அதனால் உயிர் தப்​பினோம்’’ என்​றார்.

இதற்​கிடையே, கோவை​யில் இருந்து மற்​றொரு குழு​வில் சென்ற 8 பேர் பற்​றிய தகவல் எது​வும் கிடைக்​காத​தால்​ உறவினர்​கள்​ சோகமடைந்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT