தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் மக்கள்

செய்திப்பிரிவு

சென்னை: வேலைக்​காகவெளி​நாடு​களுக்கு சென்​றவர்​கள் சட்​டப்​பேரவை தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக, விமானங்​கள் மூலம் தமிழகம் திரும்​பிக் கொண்​டிருக்​கின்​றனர். தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் நாளை நடை​பெறவுள்​ளது.

இந்த தேர்​தலில் 5.73 கோடி பேர் வாக்​களிக்க உள்​ளனர். இதற்​கிடை​யில், வேலைக்​காக வெளிநாடு​களுக்கு சென்​றுள்ள தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள் குழு​வாக​வும், தனித்​தனி​யாக​வும் விமானம் மூலம் தமிழகம் திரும்​பிக் கொண்​டிருக்​கின்​றனர்.

வெளி​நாடு​களில் இருந்து சென்​னைக்கு தின​மும் 8 ஆயிரம் முதல் 8,500 பயணி​கள் வரு​வது வழக்​கம். ஆனால் கடந்த சில நாட்​களாக சென்னைவரும் பயணி​களின் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளன.

வெளி​நாடு​களில் இருந்​தா​லும் தங்​களு​டைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்​டும் என்​ப​தற்​காக மக்கள் வரு​வது தேர்​தல் ஆணைய அதி​காரி​களை ஆச்​சரியமடைய வைத்​துள்​ளது.

SCROLL FOR NEXT