மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் | கோப்புப் படம்
சென்னை: “பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் திடீர் அறிவுரைகள், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாட்டு மக்களிடம், “வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்க வேண்டும், தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும், வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் மற்றும் பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என்று உபதேசம் செய்துள்ளார்.
பிரதமரின் இந்த திடீர் அறிவுரைகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த உரையானது சாதாரண ஏழை, எளிய மக்கள் தலையில் மிகப்பெரிய கல்லை தூக்கிப் போடப்போகிறாரோ என்ற சந்தேகத்தை எழுக்கிறது.
குறிப்பாக, பெட்ரோலியப் பொருட்களின் விலையை விண்ணை தொடும் அளவுக்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அதற்கான ஒரு பீடிகையாகவே இத்தகைய கருத்துக்களை முன்வைத்து வருகிறதோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது” என்று அவர் கூறியுள்ளார்.