தமிழகம்

‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை: 116 பேருக்கு இ.பி.எஃப்.ஓ வழங்கியது

செய்திப்பிரிவு

சென்னை: ‘பிர​யாஸ்’ திட்​டத்​தின் கீழ், ஓய்​வு​பெறும் நாளி​லேயே ஊழியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் பெறு​வதற்​கான ஆணை​களை, 116 பேருக்கு தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனம் வழங்​கியது.

மத்​திய அரசு ‘பிரயாஸ்’ என்ற திட்​டத்தை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ், ஓய்​வு​ பெறும் ஊழியர்​கள், ஓய்​வு ​பெறும் நாளி​லேயே அவர்​களுக்கு ஓய்​வூ​தி​யம் வழங்​கப்​படும்.

அதன்​படி, ஜூன் மாதத்​தில் பணி மூப்பு காரண​மாக, ஓய்வு பெற்ற 116 ஊழியர்​களுக்கு ஓய்​வூ​திய வழங்​கல் ஆணை​களை தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனத்​தின் (இபிஎஃப்ஓ) சென்னை மண்​டலம் வழங்கி சிறப்​பித்​தது.

ராயப்​பேட்டை மண்டல அலு​வலக வளாகத்​தில், நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், ஓய்​வு​பெற்ற ஊழியர்​களுக்கு ஓய்​வூ​திய வழங்​கல் ஆணை​களை மண்டல தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி ஆணை​யர் தேபி பிர​சாத் பட்​டாச்​சார்யா வழங்​கி​னார்.

நிகழ்ச்​சி​யில், உதவி ஆணை​யர்​கள் டி.கோ​விந்​த​ராஜன், பிபின்​கு​மார், எஸ்​.சதீஷ், கணக்கு அலு​வலர் (ஓய்​வூ​தி​யம்) ஏ.பிர​காஷ், மேற்​பார்​வை​யாளர் கே.ஆனந்​தி, அமலாக்க அதி​காரி சு.செந்​தில்​வேல்​ ஆகியோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT