தமிழகம்

மருது சகோதரர்கள் நினைவு தினத்தில் பால்குடம் எடுத்து மரியாதை

இ.ஜெகநாதன்

சிவகங்கை: காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் நினைவு தினத்தையொட்டி, அவர்களது நினைவிடத்தில் பொதுமக்கள் பால்குடம் எடுத்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினம் மற்றும் குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் நினைவிடத்தில், சமுதாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.

அதிகாலையில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய குருபூஜை விழாவில் பலர் பால்குடம் எடுத்து வந்து நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து குடங்களில் கொண்டுவரப்பட்ட பாலை கொண்டு மருது சகோதரர்களின் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

மேலும் குருபூஜையை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்டோர் பால் குடம், முளைப்பாரி, அழகு குத்தி தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்தினார்.

முன்னதாக அக்.24-ம் தேதி திருப்பத்தூரில் உள்ள மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சார்பிலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT