பால்​க​னக​ராஜ், அறிவழகன்

 
தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்​ சங்க தலைவராக பால்கனகராஜ் மீண்டும் தேர்வு

செயலாளரானார் அறிவழகன்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தின் (எம்​எச்​ஏஏ) புதிய தலை​வ​ராக பாஜக மாநிலத் துணைத் தலை​வ​ராக பதவி வகிக்​கும் வழக்​கறிஞர் ஆர்​.சி.​பால்​க​னக​ராஜ் 5-வது முறை​யாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.

இதே​போல செய​லா​ளர் பதவிக்கு தவெக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்​.அறிவழகன் தேர்​வாகி​யுள்​ளார். சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சுமார் 20 ஆயிரம் வழக்​கறிஞர்​களை உறுப்​பினர்​களாக கொண்ட பாரம்​பரியமிக்க, மிகப்​பெரிய வழக்​கறிஞர்​கள் சங்​க​மான சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தின் (எம்​எச்​ஏஏ) தேர்​தல் கடந்த ஏப்​.29 அன்று நடந்​தது.

இதில் தங்​களது நிலு​வைக் கட்​ட​ணத்தை முறை​யாக செலுத்தி உறுப்​பினர் பதிவை புதுப்​பித்த 5 ஆயிரத்து 902 பேருக்கு வாக்​குரிமை அளிக்​கப்​பட்​டது. இதில் 4 ஆயிரத்து 353 வாக்​கு​கள் பதி​வானது.

இந்த தேர்​தலில் தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட்ட பாஜக மாநிலத் துணைத் தலை​வ​ரான ஆர்​.சி. பால்​க​னக​ராஜ் ஆயிரத்து 892 வாக்​கு​கள் பெற்று மீண்​டும் தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

இவரை எதிர்த்​துப் போட்​டி​யிட்ட சங்​கத்​தின் முன்​னாள் செய​லா​ள​ரான ஆர்​.கிருஷ்ணகு​மார் ஆயிரத்து 307 வாக்​கு​கள் பெற்று இரண்​டா​மிட​மும், பார் கவுன்​சில் உறுப்​பின​ரான எம்​.வேல்​முரு​கன் 860 வாக்​கு​கள் பெற்று மூன்​றாமிட​மும் பிடித்​தனர்.

இதே​போல செய​லா​ளர் பதவிக்கு போட்​டி​யி்ட்ட தவெக வழக்​கறிஞரணி மாநில ஒருங்​கிணைப்​பாள​ரும், சங்​கத்​தின் முன்​னாள் துணைத் தலை​வரு​மான எஸ். அறிவழகன் வெற்றி பெற்​றார்.

இதே​போல துணைத் தலை​வர் பதவிக்கு சசிக்​கு​மாரும், பொருளாளர் பதவி்க்கு ஜி.​ராஜேஷூம் வெற்றி பெற்​றனர். மற்ற பதவிக்​கான வாக்கு எண்​ணிக்கை தொடர்ந்து நடந்து வரு​கிறது.

தலை​வ​ராக மீண்​டும் தேர்​வாகி​யுள்ள ஆர்​.சி,​பால்​க​னக​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “என் மீது நம்​பிக்கை வைத்து ஆசி​யா​விலேயே மிக பழமை​யான இந்த வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தில் என்னை 5-வது முறை​யாக தலை​வ​ராக தேர்ந்​தெடுத்​துள்​ளனர்.

வழக்​கறிஞர்​களின் நலன் தான் முக்​கி​யம். அரசி​யலுக்கு இந்த சங்​கத்​தில் எந்த வேலை​யும் இல்​லை. சாதி, மதங்​களுக்கு அப்​பாற்​பட்டு வழக்​கறிஞர்​களின் குரலாக நடுநிலை​மை​யுடன் செயல்​படு​வேன் என்றார்.

SCROLL FOR NEXT