சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: சமூகநீதியை நிலைநாட்டு வதையே தன் இலக்காகக் கொண்டு ஆட்சியை செலுத்தி, இந்தியா முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மேலெழுந்து வர காரணமாக இருந்த இடஒதுக்கீட்டை துணிச்சலாக அளித்தவர்
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்.
இன்றைய ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது, வி.பி.சிங்கை ‘கோட்’ என கொண்டாடதோன்றுகிறது. பதவி, பொறுப்புகளைவிட செய்யவந்த பணிக்காக வாழ்ந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் வாழ்க.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற தன் ஆட்சியையே விலையாகத் தந்த உறுதிக்குச் சொந்தக்காரர். தமிழகம் கொண்டாடும் வி.பி.சிங்கைப் போற்றுவோம்.
பாமக தலைவர் அன்புமணி: மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை வழங்கியவர். அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற லட்சியத்தை வென்றெடுக்க உறுதியேற்போம்.