தமிழகம்

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: வளைகுடா நாடு​களில் போர் பரவி​யுள்​ள​தால் அங்​குள்ள இந்​தி​யர்​களின் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும் என அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்தி உள்​ளனர்.

ஈரான் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

          

எதிர்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி: ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட மத்​திய கிழக்கு நாடு​களில் நில​வும் பதட்​ட​மான சூழலை கருத்​தில் கொண்​டு, அங்கு வசிக்​கும் மற்​றும் பணிபுரி​யும் நம் இந்தியர்கள் மற்​றும் தமிழக மக்​கள் அனை​வரும் பாது​காப்​பாக இருக்​கு​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன். அங்கு வசிக்​கும் தமிழர்​களின் பாது​காப்பை உறு​தி ​செய்ய உரிய நடவடிக்​கைகளை மேற்​கொள்ள மத்​திய அரசை வலி​யுறுத்​துகிறேன்.

பாமக தலை​வர் அன்​புமணி: வளைகுடா நாடு​களில் கணிச​மான எண்​ணிக்​கை​யில் தமிழர்​களும் உள்​ளனர். போரால் தமிழர்​கள் உள்​ளிட்ட இந்​தி​யர்​களின் பாது​காப்​புக்கு பெரும் அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டுள்​ளது.

இந்​தி​யர்​களின் பாது​காப்பை உறுதி செய்​யும்​படி வளைகுடா நாடு​களின் அரசுகளை இந்​தியா கேட்​டுக்​கொள்ள வேண்​டும். போரை கைவிட்டு அமை​திப் பேச்சு மூலம் தீர்வு காண சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் முன்வர வேண்​டும். இந்​தியா இதற்​கான நடவடிக்​கைகளை முன்​னெடுக்க வேண்​டும்.

தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா: ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட மத்​திய கிழக்கு நாடு​களில் நிலவி வரும் பதட்​ட​மான சூழ்​நிலையை கருத்​தில் கொண்டு அங்கு வசிக்​கும் தமிழர்​களின் பாது​காப்பை உறுதி செய்ய தேவை​யான மற்​றும் உரிய அனைத்து நடவடிக்​கைகளை​யும் மத்​திய அரசு மேற்​கொள்ள வேண்​டும்.

அகில இந்​திய சமா​தான ஒரு​மைப்​பாட்​டுக் கழக பொதுச் செய​லா​ளர் ஜி.ஆர்​.ர​வீந்​தர​நாத்: ஈரானுடைய இறை​யாண்​மைக்​கும், சுதந்​திரத்​துக்​கும் எதி​ராக, அந்​நாட்​டின் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதல் நடத்தி வரு​வது சர்​வ​தேச சட்​டங்​களுக்​கும், ஐக்​கிய​நாடு​கள் அவை​யின் சட்ட நெறி​முறை​களுக்​கும் மேற்கு ஆசி​யா​வின் அமை​திக்​கும் எதி​ரான​தாகும். இத்தாக்​குதலை மத்​திய அரசு கண்​டிக்க வேண்​டும்

டிரேட் யூனியன் சென்​டர் ஆஃப் இந்​தியா பொதுச் செய​லர் ஆர்.மனசை​யா: அமெரிக்கா இஸ்​ரேல் இணைந்து ஈரான் மீது ஈரான் தலை​வரை கொலை செய்​திருப்​பது கண்​டனத்​துக்​குரியது. பிரதமர் மோடி, ஐக்​கிய நாடு​கள் அமைப்பு மூல​மாக உலக அமை​திக்​கான பேச்​சு​வார்த்​தையை முன்​னெடுக்​க வேண்​டும்​.

SCROLL FOR NEXT