தமிழகம்

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் சாராயத்தை ஒழிப்பேன் என ஏன் கூறுவதில்லை? - தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் கேள்வி

செய்திப்பிரிவு

“இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சிகள் சாராயத்தை ஒழிப்பேன் என ஏன் கூறுவதில்லை” என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் பேசியதாவது: தமிழகத்தில் மாற்றம் மாற்றம் எனக் கூறும் அரசியல் கட்சிகள் இலவசம் என்கிற கவர்ச்சி திட்டத்தை அறிவிக்கின்றனர். இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சியினர் ஏன், சாராயத்தை ஒழிப்பேன் எனக் கூறுவதில்லை. நிறைந்த போதையில் தவறுகள் அதிகரித்துள்ளது. 6 வயது குழந்தை முதல் 60 வயது அம்மா வரைக்கும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

          

இலவசங்களை கொடுத்து மக்களை வேலை செய்யவிடாமல் தடுத்து விட்டீர்கள். வட இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை கொண்டு வந்தீர்கள். எஸ்ஐஆர் மூலம் ஒன்றரைக்

கோடி வட இந்தியர்களுக்கு வாக்குகளை வாங்கிக் கொடுத்துள்ளீர்கள். என் நாட்டில் அரசியல் அதிகாரத்தை வட இந்தியர்கள் முடிவு செய்வார்கள். ஏற்கெனவே நாம் மொழி, வரலாறு, வழிபாடு, நிலத்தை விட்டு வெளியேறி விட்டோம். என் நிலத்தில் வட இந்தியர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினால், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வழி இல்லை.யாருடைய பெயரை தலைவர் உச்சரிக்கிறாரோ

யார் ஒருவர் இந்த மண்ணை பேரன்பு கொண்டு காதலிக்கிறாரோ அவரால் தான் இதை சரி செய்ய முடியும். அதனால்தான் எத்தனை முறை தோற்றாலும் அவர்களோடு கூட்டணி வைக்காமல் தனித்து தேர்தலைச் சந்திக்கிறோம். மலையையும், மண் வளத்தையும் கடத்துகிறார்கள். மலை வளங்களை சுரண்டி, மழை வளங்களை அழிக்கும் இந்தக் கட்சிகளை புறம்தள்ள வேண்டும். நான் போதிக்கும் போது புரியாது. பாதிக்கும் போதுதான் புரியும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT