தமிழகம்

மதுராந்தகம் தொகுதியில் விதிமீறல் விவரங்கள் வெளியிடப்படவில்லை: கட்சிகள் விமர்சனம்

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: மது​ராந்​தகம் தொகுதி இடைத்​தேர்​தலில், ஐந்​து​முனை போட்டி ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றும் மற்​றும் தேர்​தல் விதி​மீறல்​ தொடர்​பாக பதி​யப்​பட்​டுள்ள வழக்​கு​களின் விவரங்​கள் உள்பட பல்​வேறு தகவல்​களை தேர்​தல் நிர்​வாகம் வெளி​யி​டா​மல் உள்​ளது. இதனால் தொகு​தி​யில் நில​வும் பிரச்​சினை​கள் தேர்​தல் அலு​வலர்​களின் கவனத்​துக்கு வரு​கிறதா இல்​லையா என்ற சந்​தேகம் எழுந்​துள்​ள​தாக பல்​வேறு கட்​சி​யினர் கேள்வி எழுப்​பி வருகின்​றனர்.

தமிழகத்​தில் கடந்த ஏப்​ரல் மாதம் 23-ம் தேதி நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தல் முடி​வில், மது​ராந்​தகம் தொகு​தி​யில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட மரகதம் குமர​வேல் 69 ஆயிரத்து 298 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். அவரை எதிர்த்து போட்​டி​யிட்ட தவெக வேட்​பாளர் எழில்​ கேத்​ரின் 62 ஆயிரத்து 090 வாக்​கு​கள் பெற்று இராண்​டாம் பிடித்​தார்.

பின்​னர், மரகதகம் குமர​வேல் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக-​வில் இணைந்​தார். இதையடுத்து இங்கு அக்​-6ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில், திமுக, அதி​முக, தவெக, நாதக, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி என ஐந்​து​முனை போட்டி ஏற்​பட்​டுள்​ளது. மேலும், இடைத்​தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டதையடுத்து தேர்​தல் நடத்தை விதி​கள் உடனடி​யாக அமலுக்கு வந்​தன.

ஆனால், மாவட்ட தேர்​தல் நிர்​வாகம் மற்​றும் தொகு​தி​யின் தேர்​தல் நடத்​தும் அலு​வலர் ஆகியோர் தரப்பில் தேர்​தல் நடத்தை விதி​மீறல்​கள் மற்​றும் புகார்​கள் தொடர்​பாக வெளிப்​படை​யாக தகவல் தெரிவிக்க மறுக்​கப்​பட்டு வரு​கிறது. இதில், வேட்​பாளர்​களின் எண்​ணிக்​கை, வேட்​புமனுத்​தாக்​கல் முதல் ரொக்​கம் பறி​முதல் வரை​யில் என எந்த தகவலும் வெளிப்​படை​யாக தெரிவிக்​கப்​பட​வில்​லை. இதுதொடர்​பாக, தொகு​தி​யின் தேர்​தல் நடத்​தும் அலு​வல​ராக நியமிக்​கபட்​டுள்ள நரேந்​திரனை தொலைபேசி​யில் தொடர்பு கொள்​ள​வும் முடிய​வில்​லை.

மேலும், செய்தி மக்​கள் தொடர்​புத் துறை மூல​மும் எந்​த வொரு தகவலும் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிடப்​பட்​ட​வில்​லை. இதனால், தொகு​தி​யில் நடக்​கும் பிரச்​சினை​கள், விதிமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மாவட்ட நிர்​வாகம் மற்​றும் தேர்​தல் அலு​வலரின் கவனத் துக்கு வரு​கிறதா என கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதனால், தேர்​தல் பணிகள் வெளிப்​படை​யாக உள்ள என தெரியாத நிலை உள்​ளது.

SCROLL FOR NEXT