கோப்புப் படம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தில் பெற்றோருடன் உறங்கிய 7 வயது சிறுமி கடந்த அக். 12-ம் தேதி அதிகாலை மாயமானார். உள்ளூர் போலீஸார் 10 நாட்களாக விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்கவில்லை. இதனால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும், சிறுமி குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. வனப்பகுதி, செங்கல் சூளை, நீர் நிலைகள் என தேடியும் பலன் இல்லை. சந்தேக நபர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காததால் சிறுமியின் பெற்றோரிடம் ஓரிரு நாட்களாக சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.