பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய ராட்சத மஞ்சள் சூரை மீன்கள்.

 
தமிழகம்

பாம்பன் மீனவரின் தூண்டிலில் சிக்கிய 3 ராட்சத சூரை மீன்கள்: ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை

செய்திப்பிரிவு

ராமேசுவரம் தமிழக மீன​வர்​கள், இந்​தி​யப் பெருங்​கடல், வங்​காள விரி​கு​டா, மன்​னார் வளை​குடா மற்​றும் பாக் நீரிணை கடற்​பகு​தி​யில் பெரும்​பாலும் இறால், நண்​டு, கணவாய் உள்​ளிட்ட வகை மீன்​களையே பிடிக்க பெரு​மள​வில் ஆர்​வம் காட்டி வரு​கின்​ற​னர். ஆனால் ஆழ்​கடல் மீன்​பிடி முறை​யில் சூரை மீன்​களை பிடிப்​ப​தற்கு பெரும்​பாலும் முன்​வ​ரு​வ​தில்​லை.

இந்​நிலை​யில் ஞாயிற்​றுக்​கிழமை ராமேசுவரம் அருகே பாக் நீரிணை கடற்​பகு​தி​யில் மீன் பிடித்து விட்டு கரை திரும்​பிய பாம்​பனைச் சேர்ந்த மீன​வர் படகு ஒன்​றில் மஞ்​சள் சூரை மீன்​கள் 3 சிக்​கின. இந்த ராட்சத மஞ்​சள் சூரை மீன்​கள் தலா 100 கிலோ, 118 கிலோ மற்​றும் 112 கிலோ எடை அளவு​களில் மொத்​தம் 330 கிலோ இருந்​தன. 3 மஞ்​சள் வால் சூரை மீன்​களை மீன் வியா​பாரி ஒரு​வர் கிலோ ரூ.230 வீதம் மொத்​தம் இருந்த 330 கிலோ மீன்​களை என ரூ.75 ஆயிரத்து 900-க்கு ஏலம் எடுத்​தார். 3 மீன்​கள் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்​பனை​யான​தால் நாட்​டுப்​படகு மீன​வர்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர்.

SCROLL FOR NEXT