தமிழகம்

எடப்பாடி தொகுதியில் 6-வது முறையாக வெற்றி பெற்றார் பழனிசாமி

98,110 வாக்​கு​கள் வித்தியாசம்

செய்திப்பிரிவு

மேட்டூர்: எடப்​பாடி தொகு​தி​யில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி 6-வது முறை​யாக வெற்றி பெற்​றார்.

சேலம் மாவட்​டம் எடப்​பாடி சட்​டப்​பேரவை தொகு​தி​யில் அதி​முக பொதுசெய​லா​ளர் பழனி​சாமி 1989-ம் ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தலில் சேவல் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். பின்​னர் 1991, 2011, 2016, 2021 ஆகிய தேர்​தல்​களில் வெற்றி பெற்​றார். 1996, 2006 ஆகிய தேர்​தல்​களில் தோல்வி அடைந்​தார். தற்​போது, 8-வது முறை​யாக எடப் பாடி​யில் போட்​டி​யிட்​டார்.

அதே​போல், திமுக சார்​பில் காசி, நாதக சார்​பில் பிரியதர்​ஷினி போட்​டி​யிட்​டனர். தவெக வேட்​பாள​ராக அருண்​கு​மார் வேட்​புமனு தாக்​கல் செய்த நிலை​யில், முன்​மொழிபவர்​களின் எண்​ணிக்கை குறை​வாக இருந்​த​தால் அவரது வேட்​புமனு நிராகரிக்​கப்​பட்​டது. எனவே, சுயேச்சை வேட்​பாளர் பிரேம்​கு​மாருக்கு தவெக தலை​வர் விஜய் ஆதரவு அளித்​தார்.

இதனிடையே, சங்​ககிரி​யில் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் தேர்​தலின் பதி​வான வாக்​கு​கள் 25 சுற்​றுகளாக நேற்று எண்​ணப்​பட்​டன. முதல் சுற்​றில் இருந்து இறுதி சுற்று வரை அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தொடர்ந்து முன்​னிலை வகித்​தார். தவெக தலை​வர் விஜய் ஆதரவு அளித்த வேட்​பாளர் பிரேம்​கு​மார் 2-வது இடத்தை பிடித்​தார். திமுக வேட்​பாளர் காசி அனைத்து சுற்​றுகளி​லும் 3-ம் இடம் பிடித்​தார்.

வாக்கு எண்​ணிக்கை இறு​தி​யில் 1 லட்​சத்து 48,933 வாக்​கு​கள் பெற்று 98,110 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். தொடர்ந்​து, எடப்​பாடி தொகுதி​யில் பழனி​சாமி 6-வது முறை​யாக வெற்​றி பெற்​றுள்​ளார்​ என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT