தமிழகம்

வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகளை விடுவிக்க பழனிசாமி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘வீட்டுச் சிறை​யில் வைக்​கப்​பட்​டுள்ள இடைநிலை ஆசிரியர் சங்க நிர்​வாகி​களை உடனடி​யாக விடு​தலை செய்ய வேண்​டும்’ என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட தனது எக்ஸ் தள பக்​கத்​தில் பதி​விட்​டிருப்​ப​தாவது: திமுக அளித்த தேர்​தல் வாக்​குறுதி எண். 311 (சம வேலைக்கு சம ஊதி​யம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாநில நிர்​வாகி​களான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்​தகு​மார், கண்​ணன் உள்​ளிட்ட 8 பேரை, நேற்று முன்​தினம் காலை 8 மணி​யள​வில் இருந்து வீட்டு சிலை​யில் திமுக அரசு வைத்​துள்​ளது.

சுமுக​மான முறை​யில் போராட்​டத்தை எதிர்​கொள்​ளத் தெரி​யாமல், இப்​படி சட்​டத்​துக்கு புறம்​பான வகை​யில் கைது நடவடிக்கைகளில் ஈடு​படு​வதும், அவர்​களின் செல்​போனைப் பறிப்​பதும் கடும் கண்​டனத்​துக்​குரியது.

கைது செய்​யப்​பட்​டு, வீட்​டுச் சிறை​யில் உள்​ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்​தா​லும், அதற்கு முழு பொறுப்​பும் முதல்​வர் ஸ்டா​லின் ஏற்க வேண்​டும்.

அறவழி​யில் போராடியதற்​காக, ஆசிரியர்களைக் கைது செய்​து, மறைத்து வைத்து துன்​புறுத்​து​வது கண்​டிக்​கத்​தக்​கது. கைது செய்​யப்​பட்​டுள்ள ஆசிரியர்களை உடனடி​யாக விடு​தலை செய்​ய​ வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT