தமிழகம்

கட்சியின் உண்மை விசுவாசிகளுக்கே உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு: பழனிசாமி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவு​கள் குறித்​தும், அதி​முக​வின் வளர்ச்​சிப் பணி​கள் குறித்​தும் ஈரோடு, தேனி, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களைச் சேர்ந்த நிர்​வாகி​கள் உடனான ஆலோ​சனைக் கூட்​டம், பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில், நேற்று நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில் பழனி​சாமி பேசி​ய​தாவது: அனைத்து நிர்​வாகி​களும் உள்​ளாட்​சித் தேர்​தலில் கவனம் செலுத்த வேண்​டும். இத்​தேர்​தலில், கட்​சிக்கு விசு​வாச​மாக உள்​ளவர்களுக்கு மட்​டுமே போட்​டி​யிட வாய்ப்பு வழங்​கப்​படும்.

அத்​தகைய நபர்​களை மட்​டுமே நிர்​வாகி​கள் பரிந்​துரை செய்ய வேண்​டும். கட்​சி​யை ​விட்​டுச் சென்​றவர்​களைப் பற்றி கவலைப்பட வேண்​டாம். பெருந்​துறை இடைத் தேர்​தல் எப்​போது நடந்​தா​லும் அதி​முக வேட்​பாளர் வெற்றி பெற்று ஈரோடு அதி​முக கோட்டை என்​பதை நிரூபிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இக்​கூட்​டத்​தில் கட்​சி​யின் அவைத் தலை​வர் தமிழ்​மகன் உசேன், துணைப் பொதுச் செய​லா​ளர் கே.பி.​முனு​சாமி, பொருளாளர் திண்​டுக்​கல் சீனி​வாசன், மாவட்​டச் செய​லா​ளர்​கள் செல்​வ​ராஜ் (ஈரோடு புறநகர் மேற்​கு), கே.சி.கருப்​பணன் (ஈரோடு புறநகர் கிழக்​கு) மற்​றும் தேர்​தலுக்​குப் பிறகு பழனி​சாமி எதிர்ப்பு நிலைப்​பாட்​டில் இருந்த எம்​எல்​ஏக்​கள் ஹரி பாஸ்​கர் (அந்​தி​யூர்), கோ.அரி (திருத்​தணி) உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT