சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வரவேற்றார்.

 
தமிழகம்

“மெட்ரோ ரயில் பாலத்தில் நான் ரீல்ஸ் ஷூட்டிங் எடுக்கவில்லை” - பழனிசாமி கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: அ​தி​முக ஆட்​சிக் காலத்​தில்​தான் சென்னை மெட்ரோ 2-வது திட்​டத்​துக்​கான டிபிஆர் தயாரிக்​கப்​பட்​டு, அடிக்​கல் நாட்​டப்​பட்டு நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது.

விளம்பர அரசி​யலில் ஈடு​ப​டா​மல், மக்​கள் நலத் திட்​டங்​களின் வெற்​றியை மட்​டுமே இலக்​காகக் கொண்டு செயல்​படு​பவன் நான் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: தமிழகத்​துக்கு வருகை புரிந்து சென்னை மெட்ரோ 2-வது திட்​டத்​தின் வடபழனி- பூந்​தமல்லி வழித்தடத்தை தொடங்கி வைத்​துள்ள பிரதமர் நரேந்​திர மோடியை சென்னை விமான நிலை​யத்​தில் மகிழ்ச்​சி​யோடு வரவேற்​றேன்.

இந்த திட்​டத்தை பொறுத்​தவரை, எனது தலை​மையி​லான அதி​முக அரசு இருந்த​போது, இதற்​கான டிபிஆர் தயாரிக்​கப்​பட்​டு, மத்​திய அரசின் அனு​ம​திபெற்​று, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவால் அடிக்​கல் நாட்​டப்​பட்​டது.

மத்​திய அரசின் நிதி வராத சூழலிலும், மாநில அரசின் நிதியை ஒதுக்​கீடு செய்​து, பணி​களை தொடக்​கிய அன்றைய அரசு அதி​முக அரசு.

மேலும், பிரதமரை பல முறை நான் சந்​தித்து மெட்ரோ திட்டத்துக்கு உரிய நிதியை விடுவிக்குமாறு கோரிய நிலை​யில், மத்​திய அரசும் நமது கோரிக்​கையை ஏற்​றுக்​கொண்​டு, ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்க 2024-ம் ஆண்டு ஒப்​புதல் அளித்​தது.

அதன் அடிப்​படை​யில் இன்​றைய தினம், வட பழனி- பூந்​தமல்லி வழித்தடம் மக்​கள் பயன்​பாட்​டுக்கு வரவுள்​ளது. அதி​முக ஆட்​சி​யில் நாம் விதைத்த விதைகள், தற்​போது வரை விருட்​ச​மாவதைக் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்​கிறது.

இந்த பழனி​சாமி நினைத்​திருந்​தால் மெட்ரோ பாலத்​தின் மீது கூலிங் கிளாஸ் போட்டு ஒரு போட்டோ ஷூட், சுரங்​கப் ​பாதைக்கு அடி​யில் பாது​காப்பு தலைக்​கவசம் போட்டு ஒரு ரீல்ஸ் ஷூட்​டிங் எடுத்​திருக்க முடி​யும். ஆனால், அப்​படிப்​பட்ட ஏமாற்று அரசி​யலில் எனக்கு ஒரு​நாளும் உடன்​பாடு இல்​லை.

“நாம் பேசக் கூடாது. நம்​முடைய செயல்​கள்தான் பேச வேண்​டும்” என்​பதை எப்​போதும் நம்​புபவன் நான். யாருடைய ஆட்சி இருந்​தா​லும், நம்​முடைய செயல்​கள் தான் தமிழக மக்​களை உயர்த்​திக் கொண்​டிருக்​கிறது என்ற பெரு​மிதத்தை நமது திட்​டங்​கள் இன்​று​வரை நமக்கு தந்​துக்​கொண்டு இருக்​கின்​றன.

இந்த இனிய தருணத்​தில், தலைநகர் சென்​னை​யின் அடுத்​தகட்ட வளர்ச்​சிக்கு மெச்​சத்​தக்க பங்​காற்றி வரும் சென்னை மெட்ரோ ரயில் அலு​வலர்​கள், ஊழியர்​கள் அனை​வருக்​கும் எனது வாழ்த்​துகளை​யும், பா​ராட்​டு​களை​யும் தெரி​வித்​துக்​ கொள்​கிறேன்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT