| படம்: எல்.சீனிவாசன் |

 
தமிழகம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் பழனிசாமி ஆலோசனை: 80-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்பு

போர்க்கொடி தூக்கிய சி.வி.சண்முகம் தரப்புக்கு அதிர்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் நேற்று நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில் 80-க்​கும் மேற்​பட்ட மாவட்​டச் செய​லா​ளர்​கள் கலந்து கொண்​ட​தால் சி.​வி.சண்​முகம் தரப்பு அதிர்ச்​சி​யடைந்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் தோல்​வியைத் தொடர்ந்து அதி​முக​வுக்​குள் கலகம் ஏற்​பட்டு சி.​வி.சண்​முகம், எஸ்​.பி.வேலுமணி உள்​ளிட்ட நிர்​வாகி​கள் பழனி​சாமிக்கு எதி​ராக தனி அணி​யாகச் செயல்​பட்டு வரு​கின்​றனர்.

மேலும் தவெக அரசு மீதான நம்​பிக்கை தீர்​மானத்​தில் பழனிசாமி தலை​மையி​லான எம்​எல்​ஏக்​கள் எதி​ராக வாக்​களித்த நிலை​யில், சி.​வி.சண்​முகம் தரப்​பைச் சேர்ந்த 25 எம்​எல்​ஏக்​கள் ஆதர​வாக வாக்​களித்​தனர்.

அதைத்​தொடர்ந்து கட்சி முடிவுக்கு எதி​ராகச் செயல்​பட்ட நிர்​வாகி​களின் கட்​சிப் பதவி​களைபறித்​து, அந்த இடங்​களில் தனது ஆதர​வாளர்​களை பழனி​சாமி நியமித்​தார்.

அதே​நேரம், பழனி​சாமி​யின் நடவடிக்​கைகள் செல்​லாது என அறி​வித்த சண்​முகம் தரப்​பு, பொதுக்​குழு கூட்​டத்​தைக்கூட்​டி, பொதுச் செய​லா​ளர் பதவி​யில் இருந்து பழனி​சாமியை நீக்​கு​வதற்​கான முயற்​சிகளில் ஈடு​பட்டு வரு​கிறது.

இத்​தகைய சூழலில் சென்னை பசுமை வழிச்​சாலை​யில் உள்ள தனது இல்​லத்​தில் மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்தை நடத்​து​வ​தாக நேற்று முன்​தினம் பழனி​சாமி அறி​வித்​தார்.

பின்​னர் அந்​தக் கூட்​டம் ராயப்​பேட்​டை​யில் உள்ள தலைமை அலு​வல​க​மான எம்​ஜிஆர் மாளி​கைக்கு மாற்​றப்​பட்​டது. இந்த தகவல் வெளி​யானதும் காலை முதலே அலு​வல​கத்​தில் ஏராள​மான தொண்​டர்​கள் குவிந்​தனர்.

பாது​காப்பு கருதி நூற்​றுக்​கணக்​கான போலீ​ஸாரும் குவிக்​கப்​பட்​டனர். காலை 9 மணி​யள​வில் அலு​வல​கத்​துக்கு பழனிசாமி வந்​தார். தொடர்ந்து மாவட்​டச் செய​லா​ளர்​களும் ஒவ்​வொரு​வ​ராக வந்​தனர்.

இதற்​கிடையே எந்த நேரத்​தி​லும் சி.​வி.சண்​முகம் தரப்​பினர் வந்து பிரச்​சினை செய்​யக்​கூடும் என்ற தகவல் பரவியது. இதையடுத்து மாவட்​டச் செய​லா​ளர்​கள் ராஜேஷ், ஆதி​ராஜா​ராம், தி.நகர் சத்யா ஆகியோரின் ஆதர​வாளர்​கள் அதிக அளவில் அங்கு திரண்​டனர்.

இதனால் பதற்​ற​மான சூழல் நில​வியது. பின்​னர் அதி​முக மாவட்​டச் செய​லா​ளர்​கள் ஒவ்​வொரு​வருட​னும் பழனி​சாமி தனித்​தனி​யாக ஆலோ​சனை நடத்​தி​னார். தேர்​தல் தோல்விக்​கான காரணங்​கள் என்ன, அதை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்​டும்? என்​பது குறித்து கேட்​டறிந்​தார்.

அதைத்​தொடர்ந்து அவர்​களிடம், “பதவிக்​காக யாரும் தவறான பாதை​யில் செல்ல வேண்​டாம். அடுத்​தடுத்த தேர்​தல்​களில் வெற்​றி​பெறும் வகை​யில் அனை​வரும் சிறப்​பாக செயல்பட வேண்​டும்.

புதிய மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூடு​தல் கவனத்​துடன் பணி​யாற்ற வேண்​டும். உங்​களுக்கு எந்த நெருக்​கடி வந்​தா​லும் நான் பார்த்​துக்​கொள்​கிறேன். இயக்​கத்​தில் குழப்​பத்தை ஏற்​படுத்​துபவர்​களுக்கு தகுந்த பதிலடி கொடுக்​கப்​படும்” என பேசி​ய​தாகக் கூறப்​படு​கிறது.

பழனி​சாமி​யின் இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பெரும்​பாலான மாவட்​டச் செய​லா​ளர்​களும், அவைத்​தலை​வர் தமிழ்​மகன் உசேனும் பங்​கேற்​றது சண்​முகம் தரப்​புக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யிருக்​கிறது.

கூட்​டத்​துக்​குப் பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய முன்​னாள் அமைச்​சர் ரமணா, “அதி​முக​வின் 87 மாவட்​டச் செய​லா​ளர்​களில் 80-க்​கும் மேற்​பட்​டோர் ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

இக்​கூட்​டத்​தில் அதி​முக​வின் ஒற்​றுமை குறித்து விவா​திக்​கப்​பட்​டது. பொதுக்​குழு கூட்​டம் குறித்து எந்த விவாத​மும் நடை​பெற​வில்​லை” என்​றார். ஆர்​.பி.உதயகு​மார் பேசும்​போது, “கட்​சியை மீண்​டும் ஆட்​சிக்கு கொண்​டுவர வேண்​டும்.

அதற்கு அனை​வரின் ஒத்​துழைப்​பும் தேவை என பொதுச்​செய​லா​ளர் தெரி​வித்​தார். மாவட்​டச் செய​லா​ளர்​கள் முழு ஆதரவு தெரி​வித்​தனர்” என்​றார்.

மூத்த தலை​வர் ராஜன் செல்​லப்பா தனது எக்ஸ் தளப் பக்​கத்​தில், “கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் முழு அர்ப்​பணிப்​புடன் ஒன்​று​பட்டு செயல்பட அதி​முக உறுதி எடுத்​துள்​ளது. அவரின் கரங்களை வலுப்​படுத்த எங்​கள் முழு ஆதர​வும் ஒத்​துழைப்​பும் தொடர்ந்து இருக்​கும்” என பதி​விட்​டுள்​ளார்.

கூட்​டத்தை புறக்​கணித்த டி.ஜெயக்​கு​மார்

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் தீவிர ஆதர​வாள​ராக அறியப்​படு​பவர் வடசென்னை தென்​கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் டி.ஜெயக்​கு​மார். தேர்​தல் தோல்விக்​குப் பிறகு ஊடகங்​களை சந்​திப்​பதை தவிர்த்து வந்​தார்.

சி.​வி.சண்​முகம் தரப்பு நடத்தி வரும் கூட்​டங்​களி​லும் பங்​கேற்​க​வில்​லை. இப்​படி​யான சூழலில் பழனி​சாமி நேற்று கூட்​டிய மாவட்டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தி​லும் ஜெயக்​கு​மார்​ பங்​கேற்​காதது அக்​கட்​சிக்​குள்​ பரபரப்​பை ஏற்​படுத்​தியுள்​ளது.

SCROLL FOR NEXT