தமிழகம்

கோபி கூட்டத்தில் உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு பழனிசாமி ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார்

செய்திப்பிரிவு

ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையத்தில் நேற்றுமுன்தினம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துகொண்டு பேசிய கூட்டத்துக்கு வந்த கோபியை அடுத்த கொண்டையம் பாளையத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் அர்ஜுனன்(43), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில், பழனிசாமி, நேற்று காலை கோபி அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அர்ஜுனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.

SCROLL FOR NEXT