தமிழகம்

அதிமுகவுக்காக உழைப்பவர்களுக்கு பதவி தேடி வரும்: பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவு​கள் குறித்​தும், அதி​முக​வின் ஆக்​கப்​பூர்​வ​மான வளர்ச்​சிப் பணி​கள் குறித்​தும் நாமக்​கல், வட சென்னை தெற்​கில் கிழக்கு, மேற்கு மாவட்​டங்​களைச் சேர்ந்த நிர்​வாகி​கள் உடனான ஆலோ​சனைக் கூட்​டம், பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் கட்சி நிர்​வாகி​களின் கருத்​துகளை பழனி​சாமி கேட்​டறிந்​தார். அப்​போது பேசிய நிர்​வாகி​கள், “தொண்​டர்​கள் அனை​வரும் உங்​கள் (பழனிசாமி) தலை​மை​யில்​தான் இருக்க விரும்​பு​கின்​றனர். சிலர் சுய நலத்​துக்​காக கட்​சி​யை​விட்டு வெளி​யேறி வரு​கின்​றனர்.

அவர்​களால் கட்​சிக்கு எந்த பாதிப்​பும் இல்​லை. தொண்​டர்​கள் அனை​வரும் அடுத்து வரும் தேர்​தல்​களில் உங்​கள் கரத்தை பலப்​படுத்​து​வோம்” என்​றனர்.

பின்​னர் பழனி​சாமி பேசி​ய​தாவது: விரை​வில் உள்​ளாட்​சித் தேர்​தல் நடை​பெற உள்​ளது. உங்​கள் மாவட்​டங்​களில் உள்ள அனைத்து இடங்​களி​லும் அதி​முக வேட்​பாளர் வெற்றி பெற வேண்​டும்.

தோல்​வியைச் சந்​திக்​கும்​போது, கட்​சி​யில் இருந்து சிலர் வில​கு​வது இயல்​பு​தான். தோல்​வியைக் கண்டு அதி​முக ஒரு போதும் அஞ்​சி​யது இல்​லை.

கட்​சிக்​காக உழைப்​பவர்​களுக்கு நிச்​ச​யம் பொறுப்​பு​கள், பதவி​கள் தேடி வரும். கட்​சிக்​காக கடுமை​யாக உழை​யுங்​கள். பலன் உங்​களைத் தேடி வரும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இதில் கட்​சி​யின் அவைத் தலை​வர் தமிழ்​மகன் உசேன், துணை பொதுச் செய​லா​ளர் கே.பி.​முனு​சாமி, பொருளாளர் திண்​டுக்​கல் சீனி​வாசன், முன்​னாள் அமைச்​சர் டி.ஜெயக்​கு​மார்​ உள்​ளிட்​டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT