தமிழகம்

பழநி நில மோசடியில் கைதான சார் பதிவாளர் தீவிர கண்காணிப்பு: மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: பழநி நில மோசடி வழக்​கில் கைது செய்​யப்​பட்ட சார் பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், திண்​டுக்​கல் அரசு மருத்​து​வ​மனை​யில் பலத்த பாது​காப்​புடன் தீவிர மருத்​து​வக் கண்​காணிப்​பில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

பழநி மடம் நில மோசடி வழக்​கில் சார் பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், முரு​க​தாஸ், வெள்​ளைத்​துரை, சேதுப​தி, அன்​வர்​தீன், ஜெயப்​பிர​காஷ் உள்​ளிட்ட 11 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார் 6 பேரை கைது செய்​தனர். இதில் மதுரை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள வெள்​ளத்​துரை, சேதுப​தி, அன்​வர்​தீன், ஜெயப்​பிர​காஷ் ஆகியோரில் அன்​வர்​தீன் திடீர் உடல்​நலக்​குறை​வால் இறந்தார்.

இந்​நிலை​யில் இந்த வழக்​கின் முக்​கிய நபரான சார் பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன் கைது செய்​யப்​பட்​ட​போது உடல்​நலக் குறை​வால் திண்​டுக்​கல் அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இந்த வழக்​கில் தொடர்​புடைய முக்​கிய நபரான அன்​வர்​தீன் உயி​ரிழந்​ததைத் தொடர்ந்​து, திண்​டுக்​கல் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​று​வரும் ஜஸ்​டின் மணி​கண்​டன் தனி அறை​யில் தீவிர மருத்​து​வக் கண்​காணிப்​பில் வைக்​கப்​பட்​டுள்​ளார்.

இவர் சிகிச்சை பெறும் வார்​டுக்கு வெளியே இரண்டு போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். மருத்​து​வர்​கள் அடிக்​கடி ஜஸ்​டின் மணி​கண்​டனின் உடல் நிலை​யைக் கண்​காணித்து வரு​கின்​றனர். வழக்கறிஞர் அன்​வர்​தீன் திடீர் உயி​ரிழப்பைத் தொடர்ந்து இவருக்​கும் மருத்​து​வக் கண்​காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT