தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற 'நாடகவியல் களஞ்சியம்' நூல் வெளியீட்டு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நூலை வெளியிடசிறை திரைப்பட இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி பெற்றுக் கொண்டார். உடன் நூலாசிரியர் ராமசுவாமி, தமிழ் வளர்ச்சி கழக தலைவர் ம.ராசேந்திரன், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் மற்றும் உரு.ராசேந்திரன். எஸ்.ஆம்ஸ்ட்ராங், முஸ்தபா ஆகியோர் பங்கேற்றனர். | படம்: ம.பிரபு |

 
தமிழகம்

திராவிட இயக்கத்தின் விதை நாடக மேடைகளில்தான் விதைக்கப்பட்டது: ப.சிதம்பரம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘​திராவிட இயக்​கத்​தின் விதை நாடக மேடைகளில்​தான் விதைக்​கப்​பட்​டது’ என்று முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் தெரி​வித்​தார். தமிழ் வளர்ச்​சிக் கழகம் சார்​பில் ‘நாடக​வியல் களஞ்​சி​யம்’ நூல் வெளி​யீட்டு விழா சென்னை பல்​கலைக்​கழக வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் எம்​.பி, சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்று நூலை வெளி​யிட, திரைப்பட இயக்​குநர் சுரேஷ் ராஜகு​மாரி முதல் பிர​தி​யைப் பெற்​றுக் கொண்​டார்.

இந்த விழா​வில், தமிழ் வளர்ச்​சிக் கழகத்​தின் தலை​வர் ம.ராசேந்​திரன், சென்னை பல்​கலைக்​கழக பதி​வாளர் (பொறுப்​பு) ரீட்டா ஜான், துணைவேந்​தர் பொறுப்​புக் குழு உறுப்​பினர் எஸ்​.ஆம்​ஸ்ட்​ராங், நூலாசிரியர் மு.​ராமசு​வாமி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

இந்​நிகழ்​வில், ப.சிதம்​பரம் பேசி​ய​தாவது: கடந்த 2008-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டு, 2011-ல் வரைவு நூல் வந்​து, பல்​வேறு திருத்​தங்​களுக்​குப் பிறகு இன்​றைக்கு ஒரு முழு​மை​யான நூலாக ‘நாடக​வியல் களஞ்​சி​யம்’ வெளிவந்​துள்​ளது. தமிழ் வளர்ச்​சிக் கழகத்​தின் நிதிச் சுமையை அரசின் ஒத்​துழைப்​போடு குறைத்​துள்​ளோம்.

இதற்​காக ரூ.2.15 கோடி நிதியை தமிழக அரசு வழங்​கி​யுள்​ளது. மேலும், ரூ.1 கோடியை நன்​கொடை​யாக திரட்​டி, நூறு ஆண்​டு​கள் நிதிச்​சுமை​யின்றி கழகம் செயல்​படு​வதற்​கான பணி​களை மேற்​கொண்டு வரு​கிறோம்.

அதே​போல், அறிஞர்​கள் சந்​தித்து விவா​திப்​ப​தற்​கான ஒரு தளத்​தை​யும் நாம் உரு​வாக்க வேண்​டும். எல்​லோரும் அவ்​வப்​போது சந்​தித்து கருத்​துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்​டும். அப்​போது​தான் புதிய சிந்​தனை​கள் பிறக்​கும். எனக்கு நாடகங்​கள் மிக​வும் பிடிக்​கும். பல சிறந்த நடிகர்​களை உரு​வாக்​கியது நாடகம்​தான்.

அது​மட்​டுமின்றி, தமிழகத்​தின் அரசி​யலில் நாடகத் துறை​யின் பங்கு மிக​வும் முக்​கிய​மானது. திராவிட இயக்​கத்​தின் விதையே நாடக மேடைகளில்​தான் விதைக்​கப்​பட்​டது. அண்​ணா, கருணாநிதி ஆகியோர் நாடகங்​களை அரசி​யல் மாற்​றங்​களுக்கு திறம்​படப் பயன்​படுத்​தினர்.

இனி 3 மாதங்​களுக்கு ஒரு நூல் என பல்​வேறு நூல்​களை வெளி​யிட தமிழ் வளர்ச்​சிக் கழகம் திட்​ட​மிட்​டுள்​ளது. எனவே இன்​னும் பல பேர் எழுது​வதற்கு ஆர்​வத்​துடன் முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT