எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். படம்: எஸ்.குருபிரசாத் | அடுத்த படம்: ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

 
தமிழகம்

மனு தாக்கலுக்கான அவகாசம் முடிவடைந்தது: தமிழகம் முழுவதும் 7,000-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு

இபிஎஸ், நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை தாக்கல் செய்தனர்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் நேற்று மாலை​யுடன் முடிவடைந்​தது. பழனி​சாமி, நயி​னார் நாகேந்​திரன், செல்​வப்​பெருந்​தகை, தமிழிசை சவுந்​தர​ராஜன், பிரேமலதா உள்​ளிட்​டோர் மனுக்​களை தாக்​கல் செய்​தனர். தமிழகம் முழு​வதும் தாக்​கல்செய்​யப்​பட்​டுள்ள 7,000-க்கும் மேற்பட்ட வேட்​புமனுக்​கள் பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்​கு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளில் முதல்​வர் ஸ்டா​லின், தவெக தலை​வர் விஜய், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்​டோர் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்​தனர். அதன்​பின்​னர், 4 பொது விடு​முறை நாட்​களில் மனு தாக்​கல் நடை​பெற​வில்​லை.

          

இந்​நிலை​யில், வேட்​புமனு தாக்​கல் செய்ய நேற்று கடைசி நாள் என்​ப​தால், அனைத்து தொகு​தி​களி​லும் காலை முதலே மனு தாக்கல் களை​கட்​டியது.

எடப்​பாடி​யில் அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, சாத்​தூரில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், விருத்​தாசலத்​தில் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் ஆகியோர் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்​தனர்.

ஸ்ரீபெரும்​புதூரில் தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, அவி​நாசி​யில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், மயி​லாப்​பூரில் முன்​னாள் பாஜக மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், கோவை வடக்​கில் பாஜக தேசிய மகளிர் அணி தலை​வர் வானதி சீனி​வாசன், தரு​மபுரி​யில் சவுமியா அன்​புமணி ஆகியோ​ரும் மனுக்​களை தாக்​கல் செய்​தனர்.

இது​போல தமிழகம் முழு​வதும் அதி​முக, காங்​கிரஸ், பாஜக மற்​றும் சுயேச்சை வேட்​பாளர்​கள் ஏராள​மானோர் நேற்று வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்​தனர்.

மனு தாக்​கலுக்​கான அவகாசம் மாலை 3 மணி​யுடன் முடிவடைந்​தது. தமிழகம் முழு​வதும் கடைசி நாளான நேற்று மட்​டும் 1,500-க்​கும் அதி​க​மான வேட்​புமனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. இது​வரை மொத்​தம் 7 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன.

சென்​னை​யில் இது​வரை 628 மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதி​கபட்​ச​மாக விஜய் போட்​டி​யிடும் பெரம்​பூர் தொகு​தி​யில் 66 மனுக்​களும், முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிடும் கொளத்​தூர் தொகு​தி​யில் 56 மனுக்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அனைத்து மாவட்​டங்​களி​லும் தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் தலை​மை​யில், துணை அலு​வலர்​கள் உதவி​யுடன் மனுக்​கள் பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்​கு​கிறது. இதில் வேட்​பாளர்​கள் அல்​லது அவர்​களது முகவர்​கள் பங்​கேற்​பார்​கள். இப்​பணி​களை பொதுப் பார்​வை​யாளர்​கள் மேற்​பார்​வை​யிடு​வார்​கள்.

மனுக்​கள் பரிசீலனை​யின்​போது, விண்​ணப்ப படிவங்​களில் பெயர், வயது, தொகு​தி, வருமானம் உள்​ளிட்ட விவரங்​கள் முழு​மை​யாக நிரப்​பப்​பட்​டுள்​ளதா என ஆய்வு செய்​யப்​படும். தேவையான ஆவணங்​கள் இணைக்​கப்​பட்​டுள்​ள​தா, குற்ற வழக்கு தொடர்​பான விவரங்​கள் இடம்​பெற்​றுள்​ள​தா, வேட்​பாளர்​கள், முன்​மொழிபவர்​களின் கையொப்​பங்​கள் சரி​யாக இடப்​பட்​டுள்​ளதா என்​றும் ஆய்வு செய்​யப்​படும்.

இதில் ஏதேனும் குறை​பாடு இருந்​தால், மற்ற வேட்​பாளர்​கள் சார்​பில் ஆட்​சேபங்​களைத் தெரிவிக்​கலாம். அதன்​பிறகு, வேட்​புமனுக்​களை ஏற்​பது குறித்து தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் முடி​வெடுத்து அறி​விப்​பார்​கள். ஏற்​கப்​படு​கிற, தள்​ளு​படி செய்​யப்​படு​கிற வேட்​புமனுக்​கள் விவரம் இன்று மாலை 3 மணிக்கு வெளி​யாகும்.

SCROLL FOR NEXT