உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

 
தமிழகம்

இந்து கோயிலுக்குள் பிற மதத்தினர் செல்லும் விவகாரம்: விதிமுறைகளை முறையாக பின்பற்ற தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: இந்து கோயிலுக்​குள் பிற மதத்​தினர் செல்​லும் விவகாரத்​தில் விதி​முறைகளை முறை​யாக பின்​பற்ற வேண்​டும் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரை மாவட்ட இந்து முன்​னணி ஒருங்​கிணைப்​பாளர் தங்​கம் வெங்​கடேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறி​யிருந்​ததாவது: இந்து கோயில்​களில் பிற மதச் சின்​னங்​களை அணிந்​திருப்​பவர்​கள், இந்து மத நம்​பிக்​கையை பின்​பற்​றாதவர்​கள் கோயில் கரு​வறை மற்​றும் மண்​டபங்​களுக்கு செல்​லக் கூடாது என விதி உள்​ளது. இந்த விதி சமீபகாலங்​களில் இந்து கோயில்​களில் பின்​பற்​றப்​படுவதில்லை. பிற மதச் சின்​னங்​களை அணிந்​திருப்​பவர்​கள் தடை​யில்​லாமல் கோயிலுக்​குள் சென்​று​வரும் நிலை உள்​ளது.

எனவே, தமிழகத்​தில் அனைத்து பொதுக் கோயில்​களி​லும் பிற மதச் சின்​னங்​களை அணிந்​திருப்​பவர்​கள் மற்​றும் இந்து மதத்​தைச் சாராதவர்​கள், கோயி​லின் கட்​டுப்​படுத்​தப்​பட்ட கரு​வறை மற்​றும் மண்​டபங்​களுக்​குள் நுழைவதைத் தடுக்​கவும், தமிழ்​நாடு கோயில் நுழைவு அங்​கீகாரச் சட்​டம், இந்து சமய அறநிலை​யத் துறை சட்​டப்​பி​ரிவு​களை கடுமையாக அமல்​படுத்​தவும், பிற மதச் சின்​னங்​களை வெளிப்​படை​யாக அணிந்து வருபவர்​களை கோயிலுக்​குள் அனுமதிக்​கும் அதி​காரி​கள் மீது குற்​றவியல் நட​வடிக்கை மற்​றும் துறைரீதி​யான நட​வடிக்கை எடுக்​கவும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்போது நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தரவு: இந்து கோயில்​களுக்​குள் பிற மதத்​தினர் சென்று வழிபாடு நடத்​தும்​போது, விதிப்​படி ‘நம்​பிக்கை உள்​ளது’ என கையெழுத்​திட்​டுச் செல்ல வேண்​டும்.

இந்த முறையை பின்​பற்​றித்​தான் மதுரை மீனாட்சி அம்​மன் கோயிலுக்​குள் முதல்​வர் விஜய் சென்​றார். ஆனால், திருச்​செந்​தூர் கோயிலுக்​குள் அமைச்​சர் ஸ்ரீநாத் செல்​லும்​போது அந்த முறை பின்​பற்​றப்​பட​வில்லை.

திரு​வண்​ணா​மலை கோயி​லில் இஸ்லாமியர் ஒரு​வர் மத அடை​யாளத்தை அணிந்து சென்​றுள்​ளார். விதி​முறைகள் தீவிர​மாக கடைப்​பி​டிக்​கப்​படும் என அரசு தரப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. எனவே. பிற மதத்​தினருக்​கான விதி​முறைகளை முறை​யாக கடைபி​டிக்க வேண்​டும். மனு முடித்து வைக்​கப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT